”நான் குடியை விடவேண்டுமானால் நீ உயிரை விடவேண்டும்” - காதலனுக்காக உயிரை விட்ட கல்லூரி மாணவி!

பள்ளிக்கரணை பால அம்புக்கண் நகரை சேர்ந்தவர் ரவிசந்திரன். இவரது மனைவி கலைமணி. இவர்களது மகள் ரூபிணி (20). 

அதே பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார். இவருடன் படிப்பவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் (22). இவர் பள்ளிக்கரணை காமகோடி நகரில் அறை எடுத்து தங்கியுள்ளார்.  

சதீசும், ரூபிணியும் 4 ஆண்டாக காதலித்துள்ளனர். இது தெரிந்து இருவரது பெற்றோரும் அவர்களுக்கு படிப்பு முடிந்ததும் திருமணம் செய்ய முடிவுஎடுத்தனர். இந்நிலையில் நேற்று மதியம் சதீஷ் குடிபோதையில் ரூபிணி வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரூபிணி, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நமக்கு திருமணம் நடக்க வேண்டும் என்றால் குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள் என்று எச்சரித்தார். ஆனால் சதீஷோ குடிபோதையில், நான் குடியை விடவேண்டும் என்றால் நீ உயிரை விடவேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த ரூபிணி உடனே வீட்டுக்குள் சென்று அறைக்கதவை சாத்தி கொண்டார்.

இதனால் சதீஷ் அங்கிருந்து சென்றார். சிறிது நேரம் கழித்து தாய் கலைமணி கதவை தட்டியபோது திறக்கவில்லை. சந்தேகமடைந்த அவர் சத்தம் போட்டதில் அக்கம்பக்கத்தினர் வந்து கதவை உடைத்துள்ளனர். அங்கு ரூபிணி மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கியதை பார்த்து திடுக்கிட்டனர்.  உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ரூபிணி பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு, எஸ்.ஐ தங்கராஜ் ஆகியோர் வந்து ரூபிணியின் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கலைமணி புகாரின் பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv