சீனாவின் முதல் பெண் அரசியல்வாதியின் கல்லறை கண்டுபிடிப்பு- காணொளி

சீனாவின் முதல் பெண் ஆட்சியாளர் என்று கருதப்படும் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதி ஒருவரின் கல்லறையை அந்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சீன வரலாற்றின் ஒரு சிக்கலான பகுதி பற்றி அறிந்து கொள்வதற்கு இந்தக் கண்டுபிடிப்பு பெரிதும் உதவும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

பெண் பிரதமராகக் கருதப்பட்ட ஷங்குவான் வானர் என்ற பெண் அரசியல்வாதியைக் குறித்த யூகங்கள் சமீப காலங்களில் தொலைக்காட்சி நாடகங்களிலும் அங்கு சித்தரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு கவியாகவும் இருந்த ஷங்குவான் கி.பி 664லிலிருந்து 710 வரை சீனப் பேரரசி வூ செட்டியனிடம் பணியாற்றியதாகக் கூறப்படுகின்றது. அரண்மனையில் நடந்த சதித்திட்டம் ஒன்றில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஷங்குவானின் கல்லறை ஷான்ஸ்கி மாகாணத்தில் சியான்யங் பகுதியில் உள்ள விமான நிலையம் அருகே அமைந்துள்ளது. சமாதி அடிப்படையில் அந்தக் கல்லறையைக் கண்டறிய முடிந்ததாகக் கூறிய ஆய்வாளர்கள், அது மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பதையும் தெரிவித்தார்கள்.

முன்காலத்தில் அதிகாரிகள் அதனை சேதப்படுத்தியிருக்கக் கூடும் என்றும் அவர்கள் கருதுகின்றனர். எனினும், இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

சமாதியின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்துள்ளது. நான்கு சுற்றுச் சுவர்களும் இடிந்துள்ளன. தரையில் இருந்த ஓடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன என்று இணை ஆராய்ச்சியாளரான கெங் குவிங்கெங் தெரிவித்தார்.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv