மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்ற முதல் இந்திய அழகி-படங்கள்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிஸ் நியூயார்க் அழகி நினா தவுலுரி, மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் நடந்த இறுதிப் போட்டியில் பட்டம் வென்று சாதனை படைத்தார் நினா.

 நினாவுக்கு 24 வயதாகிறது. அட்லான்டிக் சிட்டியில் நடந்த போட்டியில் இந்த சாதனையைப் படைத்துள்ளார் நினா. டேலன்ட் பிரிவு போட்டியின்போது நினா பாலிவுட் ஸ்டைலில் பாட்டுப் பாடி டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார். மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்ற முதல் இந்திய வம்சவாளி அழகி இவர்தான். மேலும் இந்தப் பட்டத்தை தொடர்ந்து 2வது ஆண்டாக நியூயார்க் அழகி வென்றுள்ளார்.

மொத்தம் 53 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் நினாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. நியூயார்க்கைச் சேர்ந்த மலோரி ஹேகன் கடந்த ஆண்டு மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்றிருந்தார்.

இப்போது இந்த முறையும் நியூயார்க்குக்கே பட்டம் போயுள்ளது. மிஸ் அமெரிக்கா அழகிப் பட்டத்தை இதுவரை இந்திய அழகி யாருமே வென்றதில்லை. இப்போதுதான் முதல் முறையாக இந்த சாதனையப் படைத்துள்ளார் நினா.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv