மகாகவி பாரதியின் 92ம் ஆண்டு நினைவு நாள்

மகாகவி பாரதி, இவரை நாமும் நமது இந்தியாவும் அவ்வளவு சீ்க்கிரத்தில் மறந்துவிட முடியாது. கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என இவரது படைப்புகள் எண்ணிலடங்கா. தனது தாய்மொழி மீது கொண்டுள்ள பற்றினையும் காதலையும் மிக அழகாக தனது படைப்பின் மூலம் வெளிப்படுத்தியவர் பாரதியார்.

டிசம்பர் 11ம் திகதி1882ம் ஆண்டு பிறந்த இவர் செப்டம்பர் 11, 1921 ம் ஆண்டு காலமானார். இன்றுடன் இவர் நம்மை விட்டு நீங்கி 92 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்த வேளையில் அவரை பற்றி சில விடயங்களை நாம் நினைவு கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.


இவர் ஒரு கவிஞர், எழுத்தாளர் மட்டுமின்றி மிகச்சிறந்த பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்களை தன்னகத்தே கொண்டவர்.

கவிதை எழுதுபவன் கவிஞனாகிறான். ஆனால் அதற்கும் மேலாக கவிதையையே தனது வாழ்க்கையாகவும் முழு மூச்சாகவும் கொண்டு வாழ்ந்தவர் தான் மகாகவி பாரதியார் என்றால் மிகையாகாது.

இவரது கவித்திறனை கண்டு வியந்த மதுரை எட்டப்ப நாயக்க மன்னர் எட்டயபுர அரசசபையின் முன்நிலையில் “சுப்புரமணியாக” இருந்த நமது கவிஞருக்கு பாரதி என பட்டமளித்து மகிழ்ந்தார். அன்று முதல் சுப்புரமணியாக இருந்தவர் பாரதி என்று பெருமையுடன் அழைக்கப்பட்டார்.


தமிழ் மீதும் தாய்நாட்டின் மீதும் அளவு கடந்த அன்பு கொண்ட பாரதி தாய்நாட்டிற்காகவும், தமிழிற்காகவும் தனது வாழ்க்கையை அற்பணித்துள்ளார். பல மொழிகளை கற்று அறிந்த இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என பெருமையுடன் மார்தட்டி தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார்.


பாரதியின் படைப்புகள்

குயில் பாட்டு

கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.

பாஞ்சாலி சபதம்

புதிய ஆத்திச்சூடி

சுயசரிதை

பாரதி அறுபத்தாறு

ஞானப் பாடல்கள்

தோத்திரப் பாடல்கள்

விடுதலைப் பாடல்கள்

சந்திரிகையின் கதை


விடுதலைப்போராட்டத்தில் பாரதியி்ன் பங்கு

கற்று அறிந்த தமிழ் மொழியையும் கவிதை திறனையும் பயன்படுத்தி விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்.

"வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்"

என்ற இவரது வரிகள் அநேக இளைஞர்களை விடுதலைப்போராட்டத்திற்கு தூண்டியது. இவரது வரிகளால் ஈர்க்கப்பட்ட அநேகர் சுதந்திர போராட்டத்திற்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்தனர் என்றால் மிகையாகாது.

“ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” - என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே நம்பிக்கையுடன் பாடிய இவரது வரிகள் அக்காலக்கட்டத்தில் மக்களிடையே புத்திணுர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் துரதிஸ்ட வசமாக விடுதலைக்கு முன்பே செப்டம்பர் 11, 1921 ம் ஆண்டு மறைந்தார்.
சேனைப் படைகளால்
இயலாமல் போன தினம் ...
யானை ஒன்று மிதித்து
கவிஞனை கொன்ற தினம் ...

பதிமூன்று பேர் மட்டும்
இடுகாடு வரை வந்த தினம்,
செத்த பின் உன் பெருமையை
தூக்கிப் பிடித்தது எம் இனம்....

பாட்டால் 'பா'ரதம் ஒட்டிய
பாட்டா.....
நாடு விட்டு ஓடிய
வெள்ளையனை நீ
காணாமல் போனது
உன் துரதிர்ஷ்டமே.....

வெள்ளையன்
வெளியேறினாலும்
கொள்ளையடிக்க
உள்ளூரில் நம் இனத்தில்
மிச்சம் வைத்துப்
போனது எம்
துரதிர்ஷ்டமே...


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv