பூமியதிர்ச்சியை முன்கூட்டியே அறியும் எறும்புகள் : ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

பூமியதிர்ச்சி ஏற்படப் போவதை எறும்புகள் முன்கூட்டியே அறிந்துகொள்ளும் இயல்புடைய உயிரினம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஜேர்மனியில் உள்ள டிஸ்பர்க் பல்கலைக்கழக உயிர் அறிவியல் துறை ஆய்வாளர் கேப்ரியல் பார்பெரிக் தலைமையிலான குழுவொன்றே இதனைத் தெரிவித்துள்ளது. 

கடந்த 3 ஆண்டுகளாக சிவப்பு நிற சிற்றெறும்புகள் குறித்து இக்குழு ஆய்வு செய்துள்ளது. இவ்வாய்வு தொடர்பில் குறித்த ஆராய்ச்சிக் குழு வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில் தெரிவித்திருப்பதாவது சாதாரண நாட்களில், பகல் நேரம் முழுவதும் இரை சேகரிப்பதில் ஈடுபடும் எறும்புகள், இரவு நேரங்களில் புற்றில் ஓய்வெடுக்கும். ஆனால், பூமியதிர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்பதாவவே இரவு நேரத்தில் அவை குடியிருக்கும் புற்றிலிருந்து வெளியேறிவிடுகின்றன


பின்னர் பூமியதிர்ச்சி ஏற்பட்டதனையடுத்து அவை சாதாரண நிலைக்கு திரும்பிவிடுகின்றன. பூமியதிர்ச்சி ஏற்படும் வேளைகளில் நிலத்தின் கீழ் உருவாகும் வாயுக்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாக எறும்புகள் வெளியேறுகின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரினங்கள் இயற்கை அனர்த்தங்களை எதிர்வுகூறமாட்டாது. ஆனால் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் வேளைகளில் மாறுபடும் காலநிலையை உணர்ந்தே உயிரினங்கள் செயற்படுகின்றதாக இதற்கு முன் பல ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளது.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv