பிரபஞ்சத்தின் ஆரம்பத்தை பார்க்க உதவும் தொலைநோக்கி

13 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள, பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் பால்வெளிகள் உருவாகுவதை பார்க்க்கூடிய 30 மீற்றர் விட்டமுடைய தொலைநோக்கி ஒன்றினை உருவாக்குவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் 2014ம் ஆண்டு தொடங்க இருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

 2020ம் ஆண்டிற்கிடையில் கட்டிமுடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த தொலைநோக்கி இதுவரை காலமும் தொலைநோக்கிகளில் மிகப்பெரியதாக இருக்கும். இப்போதுள்ள தொலைநோக்கிகளைவிட மூன்று மடங்கு துல்லியமான படங்களை இது உருவாக்கும் என எதிர்பார்ககப்படுகின்றது.

சித்திரை 2014 இல் அனைத்து பூர்வாங்க வேலைகளும் முடிக்கப்பட்டு, தொலைநோக்கியின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த தொலைநோக்கியின் ஆரம்ப கட்ட பணி, பால்வெளிகளில் நட்சத்திரங்களின் உருவாக்கங்கள் எவ்வாறு நிகழ்கின்றது என்பதனை ஆராய்வதாக இருக்கும்.

ஆரம்பத்தில் 98மீற்றர் நீளமுள்ளதாக அமைக்கப்படவுள்ள தொலைநோக்கி, 2022 இல் 138மீற்றர் நீளமுள்ளதாக மாற்றியமைக்கபடும். இதன் கட்டுமாப் பணிகளுக்கு ஏறத்தாள 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv