மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு

மனித சிறுநீரில் இருந்து பற்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் சீன ஆராய்ச்சியாளர்கள். சீனாவின் குவாங்சுவோ பயோமெடிசின் மற்றும் ஹெல்த் டீத் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செயற்கை பற்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

 இதன் ஒருபகுதியாக மனித சிறுநீரிலிந்து வெளியேறும் செல்கள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை கூடத்தில் பரிசோதிக்கப்பட்டது. அந்த செல்கள் ரீஜெனரேஷன் முறையில் ஸ்டெம் செல்களாக மாற்றம் செய்யப்பட்டன.

 இந்த ஸ்டெம் செல்களுடன் எலிகளின் உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் ஆகியவற்றை சேர்த்து செயற்கை பற்களை உருவாக்கும் சோதனை நடத்தப்பட்டது.

 இந்த பரிசோதனையில் 3 வார காலத்தில் செயற்கை பற்கள் உருவானது. மேலும் பற்களுக்கு தேவையான டென்டல் பல்ப், டென்டின், எனாமல் ஸ்பேஸ், எனாமல் ஆர்கன் உள்ளிட்டவை தேவையான அளவு இருந்ததும் தெரிய வந்தது.

 எனினும் இயற்கையான பற்களை போன்று இதில் கடினத்தன்மை இல்லை என்றும், இந்த சோதனையில் எதிர்பார்த்தது  கிடைத்துள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த முறையில் பற்களில் கடினத்தன்மையை ஏற்படுத்த ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv