உயரமான பகுதிகளில் மனிதனின் எடை குறைகிறது: ஆய்வில் தகவல்

பூமியின் அனைத்து பகுதிகளிலும் மனிதனின் உடல் எடை ஒரே மாதிரியாக இருப்பதில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலிய கர்டின் பல்கலைகழக விஞ்ஞானிகள் மனிதனின் உடல் எடைக்கும், புவி ஈர்ப்பு விசைக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வில், பூமியின் புவிஈர்ப்பு விசை வெவ்வேறு இடங்களில் மாறுபடுவதால் மனித உடல் எடையும் மாறுவது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஆய்வாளர் கிறிஸ்டியன் ஹர்ட் கூறுகையில், சீரான கோள வடிவில் பூமி இல்லை.

இதில் பல்வேறு உயர்ந்த குன்றுகளும், பள்ளத்தாக்குகளும், ஆழமான கடல்களும் உள்ளன.

இந்த அனைத்து பகுதிகளிலும் புவி ஈர்ப்பு விசை சீராக இருப்பதில்லை. இதற்கு ஏற்றாற் போல் மனிதனின் உடல் எடையும் மாறுபடுகிறது.

அதாவது, பூமியின் ஒரு பகுதியிலிருந்து உயரமான மலைப் பகுதிக்கு செல்லும் ஒருவருக்கு உடல் எடை கணிசமான அளவு குறைகிறது.

தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் உள்ள நிவேடோ ஹுயாஸ்கரன் மலைப்பகுதியில் மிகக் குறைந்த புவி ஈர்ப்பு விசையும், ஆர்க்டிக் கடல் பகுதியில் அதிக அளவிலான புவி ஈர்ப்பு விசையும் பதிவாகின.

ஆர்க்டிக் கடல் பகுதியில் இருக்கும் நபரின் உடல் எடை நிவேடோ மலைப்பகுதிக்கு செல்லும் போது ஒரு சதவீதம் குறைகிறது.

ஆர்க்டிக் கடல் பகுதியில் 100 மீட்டர் உயரத்திலிருந்து குதிக்கும் நபர், நிவேடோ மலைப்பகுதியில் 100 மீட்டர் உயரத்திலிருந்து குதிக்கும் போது நிலப்பகுதியை அடைய 16 மில்லி நொடிகள் தாமதமாகிறது.

குதிக்கும் நபர் ஒரு சதவீத உடல் எடையை இழப்பதே இதற்கு காரணம்.

பூமியின் வெவ்வேறு இடங்களில் இவ்வகை எடை மாறுபாடு ஏற்படினும், மனிதனின் நிறையில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv