பிரிட்டனில் இயங்கும் மாபெரும் தமிழர் நிறுவனம்: 82 மில்லியனுக்கு காணிகளை வாங்கியது !

லண்டனில் இயங்கிவரும் தமிழருக்குச் சொந்தமான மாபெரும் நிறுவனம் ஒன்று லண்டன் மையப்பகுதியில் 3.7 ஏக்கர் காணியை வாங்கியுள்ளதாக ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆம் "லைக்கா மோபைல்" என்னும் இன் நிறுவனமே லண்டனில் உள்ள சவுத் குவே(மையப் பகுதி) £82 மில்லியன் பவுண்டுகள் செலவில் இக் காணியை வாங்கியுள்ளது.

திரு.சுபாஸ்கரன் என்பவரால் நடத்தப்பட்டு வரும் லைக்கா ரெல் குழுமத்தால், லைக்கா மோபைல், லைக்கா பிரயாண ஒழுங்கு, லைக்கா வங்கி(கிரெடிட் காட் வழங்கும்) நிறுவனங்கள் எனப் பல நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகிறது. வருடம் ஒன்றுக்கு பல மில்லியன் பவுண்டுகள் லாபமீட்டிவரும் இந்த நிறுவனம் , இலங்கை வட கிழக்கில் பல திட்டங்களை தமிழர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளதும் அவர்களுக்கு பல உதவிகளைச் செய்துவருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

 கிருஸ்டப கொலம்பஸ் வந்து இறங்கிய நகரங்களில் ஒன்றாக போற்றப்படும், மற்றும் வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் ஒன்றான சவுத் குவேயில், தமிழர் ஒருவர் இவ்வளவு பெரிய காணியை வாங்கியுள்ளது இதுவே முதல்தடவையாகும். அத்தோடு அவர் ஒரு ஈழத் தமிழர் என்பது மிகவும் பெருமையான விடையமும் கூட. தமிழர்கள், இந்தியர்கள், போலந்து மக்கள், துருக்கி மக்கள் என பல நூற்றுக்கணக்கான வேற்றின மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்வது லைக்க்கா மோபைல் ஆகும்.

உலகை மிகவும் குறைந்த விலையில் அழைக்க லைக்கா மோபைல் சிம் காட்டுகளை பல மில்லியன் மக்கள் தற்போது பயன்படுத்திவருகிறார்கள். லைக்கா மோபைல் தமது சேவையை, ஸ்பெயின் , இத்தாலி, தொடக்கம் அமெரிக்காவரை விரிவாக்கியுள்ளார்கள். அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் லைக்கா மோபைல் தற்போது கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளது.

 சர்வதேச அரங்கில், இரும்புத் தொழில் புரியும் லக்ஷ்மி மிட்டல், மைக்ரோ சாப்ட் நிறுவனம் பில் கேட்ஸ், ஆப்பிள் நிறுவனம், மற்றும் இந்தியாவில் இயங்கிவரும் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு இணையாக லைக்க நிறுவனமும் பெரும் வளர்சிகண்டு வருகிறது. இவை அனைத்திலும், இன் நிறுவனம் ஒரு ஈழத் தமிழரது நிறுவனம் என்பதே அனைவருக்கும் பெருமைசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv