காதுகளும் பார்க்கும் - பார்வையில்லாதவர்களுக்கு ஓர் நற்செய்தி

கண் பார்வையில்லாதவர்கள் காட்சிகளை காணும் வகையில் அதி நவீன கருவியை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். கண் பார்வையற்றவர்கள் காட்சிகளை காணும் வகையில் நவீன கருவிகளை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.

 இவர்களின் ஆராய்ச்சியின் பலனாக, காதில் பொருத்தப்படும் விசேஷ கருவியின் உதவியுடன் காட்சிகளை காணக்கூடிய வகையில், புதிய கருவியை உருவாக்கியுள்ளனர்.

 இதுகுறித்து ஜெருசலேமில் உள்ள ஹீப்ரு மருத்துவப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் அமிர் அமேதி கூறுகையில், கண் பார்வையற்றோரின் காதுகளில் பொருத்தப்படும் இந்த கருவி, காட்சிகளின் ஒளி அலைகளின் அதிர்வுகளை உள்வாங்கி அதை ஒலி அலைகளாக பதிவு செய்யும் தன்மை கொண்டது.

 மேலும் இந்த கருவிகளில் பொருத்தப்பட்டுள்ள கமெராக்களில் Visual Word Form எனப்படும் காட்சிகளுக்கான ஒளி மற்றும் ஒலியியல் மொழிகள் எழுதப்பட்டுள்ளன. எனவே இவை உள்வாங்கிய ஒளி அலைகளை Visual Word Form-ல் ஒலி எழுத்துகளாக மாற்றி மூளைக்கு அனுப்புகிறது.

 மூளையில் உள்ள காட்சிப் பதிவுகளை அறியும் பகுதியில், இவை மீண்டும் ஒளி அலைகளாக மாற்றம் செய்யப்படுவதால் இந்த கருவியின் மூலம் பார்வையற்றோரும் காட்சிகளை காண முடியும். இந்த கருவியை பார்வையற்றோரிடம் பரிசோதனை செய்ததில், நல்ல பலன் கிடைத்துள்ளது.

அவர்களால் காட்சிகளை தெளிவாக காண முடிகிறது. இந்த கருவியில் நிறைய காட்சிகளுக்கு ஒலி வடிவம் கொடுத்து அதற்கான மொழியை எழுத வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் முதற்கட்ட ஆராய்ச்சியில் வெற்றி கண்டுள்ளதாகவும், முழு பணிகள் முடிந்த பின் கருவியை வெளியிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv