'மிதவைக் குடை' விழாவில் இரண்டு புதிய சாதனைகள்-படங்கள்

பிரான்சில் இடம்பெறும் வருடாந்த மிதவைக்குடை (பரசூட்) விழாவில் இரண்டு புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

 ஒரேநேரத்தல் 408 மிதவைக்குடைகள் வானை அலங்கரித்ததும் அதேநேரத்தில் 391 மிதவைக் குடைகள் தரையிலிருந்து வானை நோக்கி எழுந்ததுமே இச்சாதனையாகும். பிரான்சில் ஒவ்வொரு வருடமும் இந்த சாகச நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.

பருவ மாற்றம் காரணமாக கடந்த வருடங்களில் இடம்பெறாத இந்த சாகச நிகழ்வு இவ்வருடம் நிகழ்த்தப்பட்டு உள்ளது. 10 நாட்கள் தொடர்ந்து இடம்பெற்ற இச்சாகச நிகழ்வில் சுமார் 350,000 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.

 'இந்த பத்து நாட்களில் மாலை வேளைகளில் அதிகமான காற்று வீசக்கூடியதை அவதானிக்க முடிந்தது. அதனால் அதனால் விமானங்களின் பாவனையை குறைத்துகொள்ள வேண்டி இருந்தது' என இந்நிகழ்வை ஏற்பாடு செய்த பிலிப் போர்ன் பிலட்ரி தெரிவித்துள்ளார்.
~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv