எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் சோயா பீன்ஸ்

சோயா பீன்ஸ் எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. உயிர் கொல்லியான எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைகழக விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

 ஆராய்ச்சியின் முடிவில், சோயா பீன்ஸ் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் தன்மை உடையது என தெரியவந்துள்ளது. அதாவது, சோயா பீன்சில் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி கிருமிகளை தடுக்கும் ஜெனிஸ்டின் என்ற மூலப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 இந்த ஜெனிஸ்டின் செல்களில் ஊடுருவி எச்.ஐ.வி கிருமிகள் பரவாமல் தடுக்கும் சக்தி படைத்தது. எனவே எய்ட்ஸ் நோயை சோயா பீன்ஸ் கட்டுப்படுத்தும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv