புகைப்படத்தின் வளர்ச்சியும் - வரலாறும்

போட்டோகிராபி என்ற சொல் கிரேக்க மொழியில் இருந்து உருவானது. போட்டோ என்பது கிரேக்க மொழியில் ஒளி என பொருளாகும். அதோடு கிராபி என்ற சொல்லுக்கு வரைதல் என்பது பொருளாகும்.

இந்த இரு சொல்லும் இணைந்தே ஒளியில் வரைதல் என அர்த்தம் கொள்ளப்பட்டது. கிரேக்க சொல்லான இதுவே உலகம் முழுவதும் போட்டோகிராபி என அழைக்கப்படுகிறது.

முதல் புகைப்பட கேமரா - உலகின் முதல் ஒளிப்பட கலைஞர்.

லூயிஸ் டாக்குரே. பிரான்ஸ் நாட்டை சேர்ந்தயிவர் தான் போட்டோ கேமராவை கண்டறிந்தவர்.

1787 நவம்பர் 18ந்தேதி பிறந்தார். தனது 63வது வயதில் இறந்தார். இவர் இயல்பில் ஒரு சிறந்த ஓவியர்.

ஓவிய பள்ளியும் நடத்தி வந்தார். நாடக மேடைகளின் துணிகளுக்கு ஓவியங்கள் வரைந்து தந்துவந்தார். அவர் ஒளி மூலம் வரைந்த ஓவியங்களை காப்பி எடுக்க விரும்பி ஆய்வு செய்ய தொடங்கினார்.

அவரைப்போலவே, நைஸ் ஃபோர் நிப்ஸ் என்பவரும் இதே ஆய்வில் ஈடுபட்டுயிருந்தார்.


முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கேமராவை டாக்குரே வகை கேமராக்கள் கண்டுபிடித்தவரின் பெயரை கொண்டே அழைத்தனர். அதே பெயரில் பதிவும் செய்யப்பட்டது.

170 ஆண்டுகளுக்கு பின் ஒரு டாக்குரே கேமரா வடக்கு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரத்தால் செய்யப்பட்ட இந்த கேமரா இன்னும் இயங்கும் நிலையில் உள்ளதாம். இதை ஒரு ஏல நிறுவம் ஏலம் விட்டுள்ளது. 47 கோடிக்கு இந்த கேமரா விலை போய்வுள்ளது. இந்த கேமரா தான் தற்போது விலை அதிகம்முள்ள கேமராவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெகட்டிவ் கேமரா.

ஜார்ஜ் ஈஸ்ட்மென் என்பவர் தான் நெகட்டிவ் கேமராவை கண்டறிந்தார். 1854ல் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் யூட்டிக்கா என்னும் ஊரில் பிறந்தவர். 1885ல் கேமராவில் நெகட்டிவ் மூலம் படம் எடுக்கும் முறையை கண்டறிந்தார். 1888ல் அது விற்பனைக்கு வந்தது. 1892ல் அவருக்கு பிடித்தமான கே என்ற எழுத்தில் கோடக் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதன் மூலம் நெகட்டிவ் கேமராக்களை விற்பனை செய்ய தொடங்கினார். இவரை கவுரவிக்கும் விதமாக அமெரிக்க அரசாங்கம் தபால் தலை வெளியிட்டு கவுரவப்படுத்தியது. இவரின் கோடாக் நிறுவனம் தான் முதன் முதலில் டிஜிட்டல் கேமராவை உலகுக்கு அறிமுகப்படுத்தியது.உலகின் முதல் புகைப்படம்.

உலகின் முதல் புகைப்படம் ஒரு சிறுவன் ஒரு குதிரையை அழைத்து செல்வது போன்ற புகைப்படம்மது. 1825ல் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படத்தை ஏலம் மூலம் பிரெஞ்ச் நாட்டில் விற்கப்பட்டது. 4 லட்சத்து 50 ஆயிரம் யூரோக்கு விற்பனையானது அந்தப்படம்.

ஆகஸ்ட் 19 உலக ஒளிப்பட தினம்.

1839 ஆகஸ்ட் 19ந்தேதி முதல் அங்கீகரிக்கப்பட்ட வணிக போட்டோ எடுக்கப்பட்டது. அந்த நாளே போட்டோகிராபர் தினமாக கொண்டாடப்படுகிறது.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv