மனிதாபிமானம் சாகவில்லை என்பதற்கு ஓர் உதாரணம்! உண்மை சம்பவம்

பத்திரிக்கை ஆசிரியராக பணிபுரிந்து நடைபாதைக்கு வந்து விட்ட பெண்ணுக்கு மும்பை தம்பதியினர் மீட்டு அடைக்கலம் கொடுத்துள்ளனர். மும்பை வோர்லியை சேர்ந்தவர் சுனிதா நாயக்(65). இவர் மராத்திய பெண்கள் இதழான கிரஹலட்சுமியில், ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

 இவருக்கு சொந்தமாக இரண்டு அடுக்கு மாடி குடியிருப்புகளும், புனேயில் ஒரு பங்களா வீடும் இருந்தன. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக சுனிதா நாயக், அங்குள்ள சீக்கிய வழிபாட்டுத் தலம் அருகே நடைபாதையில் வசித்து வருவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.

 இதனைத் தொடர்ந்து மும்பையை சேர்ந்த கிரகோரி மற்றும் கிறிஸ்டைன் மிஸ்குயிட்டா என்ற தம்பதி, சுனிதாவை மீட்டு அவருக்கு தங்களது வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். அத்துடன் கடந்த 12 ஆண்டுகளாக அந்தப் பெண் செல்லமாக வளர்த்து வரும் நாய்க்கும் இத்தம்பதியினர் இடம் கொடுத்துள்ளனர்.

 இது குறித்து சுனிதா நாயக் கூறுகையில், நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு காலத்தில் என் வங்கிக் கணக்கில், 50 லட்சம் ரூபாய் இருந்தது. அந்தப்பணம் எங்கே சென்றது என தெரியவில்லை. என்னுடன் பணியாற்றியவர்களில் யாரேனும் அதை எடுத்திருக்கலாம் என சந்தேகப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

 நல்ல வசதியாக வாழ்ந்த சுனிதா நாயக் இப்படி திடீரென்று தெருவிற்கு வந்தது மிகவும் வேதனையளிக்கும் விடயமாகவுள்ளது.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv