உடல் எடை அதிகரிக்க

சேனைக்­கி­ழங்கு உண்ணும் போது, உடம்பில் 150 கலோ­ரிகள் அதி­க­ரிக்கும். அதனை அடிக்­கடி சத்­தான உண­வோடு சேர்த்து சமைத்து சாப்­பிட்டால், உடல் எடை அதி­க­ரிக்கும். அவ­கா­டோவில் மோனோ­சாச்­சு­ரேட்டட் கொழுப்பு அமிலம் அதிகம் நிறைந்­துள்­ளது. இதனை சூப், சாலட் ஆகியவற்­றுடன் சேர்த்து சாப்­பி­டலாம். இதனால் உடலில் ஊட்­டச்­சத்தை அதி­க­ரிக்க தேவை­யான கொழுப்­பையும் சேர்க்கும். இதனால் ஆரோக்­கி­ய­மான முறையில் உடல் எடை அதி­க­ரிக்கும்.

மோனோ­சாச்­சு­ரேட்டட் கொழுப்பு அமிலம் நிறைந்­துள்ள இயற்­கை­யான வேர்க்­க­டலை வெண்ணெய், உடல் நல ஆரோக்­கி­யத்­துக்கு பெரிதும் துணை புரி­கி­றது. அதிலும் அதனை பிரட் அல்­லது பிஸ்­கட்­களில் தடவி உட்கொண்டால், உடல் எடையை அதி­க­ரிக்கச் செய்யும்.

பாதாம், வெண்ணெய் ஆரோக்­கி­ய­மான புரதம் நிறைந்த நட்ஸ் வகை­யாக விளங்­கு­கி­றது. மேலும் இதில் அதி முக்­கிய கொழுப்பு அமி­லங்­களும் நிறைந்­துள்­ளன. இதனை சாலட், பிரட் மற்றும் டெசர்ட்­டு­களில் சேர்த்து சாப்­பிட்டால், சருமம் பள­ப­ளப்­பா­கவும், முடியின் வளர்ச்­சியும் அதி­க­ரிக்கும். அத­னுடன் சேர்த்து உடல் எடையும் அதி­க­ரிக்கும்.

சாலட்­களில் ஒலிவ் எண்­ணெயை ஊற்றி சாப்­பி­டு­வது ஆரோக்­கி­ய­மான உண­வாக விளங்கும். அதில் அதி­க­ளவு கலோ­ரிகள் மட்­டு­மல்­லாமல், லினோ­லெயிக் அமி­லமும் அதி­க­மாக உள்­ளது. ஆகவே இந்த ஒலிவ் எண்­ணெய்யை உணவில் சேர்ப்­பதால், உடல் எடையை அதி­க­ரிப்­ப­தோடு, இதய நோய்கள் வரா­மலும் காக்கும்.

பாதாம் என்­பது நரம்பு வளர்ச்­சிக்கு பயன்­படும் உண­வாகும். இதனை உடல் எடை கூடு­வ­தற்­கான ஆரோக்­கி­ய­மான சில விட­யங்­க­ளுக்­கா­கவும் பயன்­ப­டுத்­தலாம். தினமும் ஒரு கை பாதாம் பருப்­பு­களை உண்­ணு­வதால், உடலின் செயல்­பாடு பாது­காக்­கப்­பட்டு, நரம்பு திட­மாக செயல்­படும்.

ஆளி விதையில் அதிக அளவில் மோனோ­சாச்­சு­ரேட்டட் கொழுப்­ப­மிலம் அடங்­கி­யுள்­ளது. இது உடல் ஆரோக்­கி­யத்தை காத்து, உடலை சீரான முறையில் செயல்­பட உதவும். எனவே தினமும் போது­மான அளவு ஆளி விதையை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்­கியம் பாதிக்­காமல் உடல் எடையை அதி­க­ரிக்க உதவி புரியும்

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv