மண்டபம் நிறைந்த ரசிகர்களுடன் இடம்பெற்ற CHECK MATE குறும்படம் திரையிடும் நிகழ்வு (PHOTOS)

இளம் இயக்குனர் கோவர்த்தனின் இரண்டாவது குறும்படமாக வெளிவரும் CHECK MATE ன் திரையிடும் நிகழ்வு மண்டபம் நிறைந்த சனக்கூட்டத்துடன் சிறப்பாக இடம்பெற்றது. மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ.மண்டபத்தில் பிற்பகல் 04.00 மணிக்கு கோவர்த்தனின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் புனித மிக்கல் கல்லூரியின் அதிபர் திருமதி மாசிலாமணி, அருட்தந்தை ரஜீவன் அடிகளார், சுவாமி விபுலானந்தா அழகியல்கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பிரேம்குமார் ஆகியோர் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

 இந்நிகழ்வினை இளம் கலைஞர் சனுக்சன் இன்பநாதன் தொகுத்தளித்தார். மட்டக்களப்பில் இதுவரை இடம்பெற்ற இறுவட்டு வெளியீடுகளில் அதிகளவான ரசிகர்களைக் கொண்டதாக இந்நிகழ்வு இடம்பெற்றது.

 இந்நிகழ்வுக்கான முழு அனுசரனையினையும் பிரான்ஸ் நாட்டில் உள்ள பாடுமீன் அபிவிருத்தி சங்கம் வழங்கியிருந்தது .

 இந்த நிகழ்வில் “நானும் ஒரு தாய்”,“CHECK MATE ” ஆகிய குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்டன. ஒரு கலைஞனுக்கு மிகவும் உயர்ந்த படியாக கிடைப்பது அவனது படைப்புகளுக்கான வாழ்தாகும்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதம அதிதிகள் உட்பட அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்த்து தெரிவித்தானது அந்த கோவர்த்தனுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும்.

 இந்த நிகழ்வில் அழைக்காமலேயே பல்வேறு கலைஞர்களும் பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டமை கோவர்த்தனின் வெற்றிக்கு சான்றாகும்.
0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv