வாலுடன் பிறந்த அதிசய சிறுவன்

வாலுடன் பிறந்த அதிசய சிறுவனான அர்ஷத் அலியை பொதுமக்கள் தெய்வமாக நினைத்து வழிபடுகின்றனர்.

 பஞ்சாப் மாநிலம், பதேஹ்கர் மாவட்டத்தின் நபீபூர் என்ற கிராமத்தில் கடந்த 2001ம் ஆண்டில் அர்ஷத் அலி(வயது 12) பிறந்தார். இவர் பிறக்கும் போதே இடுப்பின் பின்பகுதியில் வால் போன்ற அமைப்பும், அதுமட்டுமில்லாமல் உள்ளங்காலில் தாமரை சின்னம் உள்ளிட்ட ஒன்பது தெய்வீக குறிகள் உள்ளது.

 இதனை அறிந்த பொதுமக்கள் அவரை தெய்வமாக வழிபடத் தொடங்கிவிட்டனர். இவரின் தந்தை இறந்துவிட்டதால், தாய் சல்மா(வயது 33) மற்றொருவரை திருமணம் செய்துள்ளார்.

 இவரின் தாத்தா இக்பால் குரேஷி மருத்துவர்களிடம் இதுகுறித்த கேட்டதற்கு, அதனை அகற்றினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறியுள்ளனர். எனவே வாலை அகற்றும் முடிவை தாத்தா கைவிட்டுவிட்டார்.

 அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் இவர், வால் நீளமாக வளர்ந்துள்ளதால் சக மாணவர்களுடன் பழகவும், விளையாடவும் முடியாமல் மிகுந்த வருத்தத்துடன் உள்ளார்.

 இதுகுறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளைப் படித்த உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஆயிரக்கணக்கானோர் இவரிடம் ஆசிபெற்று செல்கின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv