கிறிஸ்து பிறப்புக்கு முன் கட்டிய மிக பழமையான கோவில் கண்டுபிடிப்பு

நேபாளத்தில் கிறிஸ்து பிறப்புக்கு முன் கட்டிய மிக பழமையான கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுற்றுலாதுறை செயலாளர் தெரிவித்துள்ளார்.


நேபாள நாட்டில் உள்ள லும்பினியில்தான் கவுதம புத்தர் பிறந்தார்.

அங்கு பேரரசர் அசோகர், கிறிஸ்து பிறப்பதற்கு முன் தூண்களுடன், செங்கல் கொண்டு கட்டிய ஒரு கோவில் தான் மிக பழமையானதாக கருதப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அதை விட மிகப்பழமையான ஒரு கிராமமும், கோவிலும் புதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவில் கிறிஸ்து பிறப்பதற்கு 1300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என நம்பப்படுகிறது.

இது குறித்து நேபாள சுற்றுலாத்துறை செயலாளர் சுஷில் கிமிரே கூறுகையில்,

‘‘அசோகர் வருவதற்கு முன்பே லும்பினியின் வரலாறு நீளுவதற்கான வலுவான ஆதாரம் கிடைத்துள்ளது.

நேபாள அரசு இந்த சிறப்பான இடத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்’’ என தெரிவித்தார். இந்த கோவில் புத்தர் பிறந்த இடத்தில் இருந்து சில நூறு அடி தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv