வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு

தற்போது பெரும்பாலானோரது சருமமானது மிகவும் வறட்சியுடன், முதுமை தோற்றத்தில் காணப்படுகிறது.
மேலும் கடுமையான வானிலையால், சருமமானது எளிதில் வறட்சி அடைந்துவிடுகிறது.


இதனால் சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் போன்றவை வெளிப்படுகிறது.

இதனை வீட்டில் உபயோகப்படுத்தும் இயற்கையான பொருட்களை கொண்டு சரிசெய்யலாம்.

தேன் மற்றும் பால்

தேன் ஒரு சிறந்த மாய்ஸ்சுரைசர். இது சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும்.

அதிலும் பால் சரும செல்களை புதுப்பித்து, சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.

எனவே இவை இரண்டையும் கலந்து சருமத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் சரும வறட்சியைத் தடுப்பதோடு சருமத்தின் நிறமும் கூடும்.கற்றாழை

3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லில், 1 டேபிள் ஸ்பூன் திராட்சை விதை எண்ணெய் சேர்த்து கலந்து, நன்கு கிளறி சருமத்தில் தடவி வந்தால் சரும வறட்சியைத் தடுக்கலாம்.

அதிலும் அதிகப்படியான எண்ணெய் பசை உள்ளவர்கள் இதனைப் பயன்படுத்தினால், அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்குவதோடு சருமமும் மென்மையாக இருக்கும்.

தேங்காய் எண்ணெய்

வறட்சியான சருமம் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து தடவி வந்தால் சருமம் புதுப்பொலிவுடன் வறட்சியின்றி இருக்கும்.

ஆப்பிள்

ஒரு ஆப்பிளை எடுத்துக் கொண்டு நன்கு மசித்து, அதில் 1/2 கப் ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் போல் செய்து, சருமத்திற்கு தடவ வேண்டும்.

இதனால் சருமம் மென்மையாகவும், ஈரப்பசையுடனும், அழகாகவும் இருக்கும்.

வால்நட்

வால்நட்ஸை அரைத்து பொடி செய்து, அதில் சிறிது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்திற்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவினால், உடனே முகம் பொலிவாக காணப்படுவதோடு சரும செல்களும் புத்துணர்ச்சியடையும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv