உடல் எடை குறைந்தால் மகிழ்ச்சியடையாதீங்க!!!

சிலருக்கு உடல் எடை அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் பல டயட்டுகளை மேற்கொள்வார்கள். இருப்பினும் எந்த ஒரு பலனும் தெரியாது.ஆனால் சிலர் உடல் எடையை குறைப்பதற்கு எந்த ஒரு செயலையும் மேற்கொள்ளமாட்டார்கள். உதாரணமாக, உடல் எடையை குறைக்க வேண்டுமென்று உணவில் கட்டுப்பாடு எதுவும் இல்லாமல், சாதாரணமாக சாப்பிடுவார்கள்.

அத்தகையவர்களுக்கு உடல் எடையானது திடீரென்று குறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமல்லாமல் பசிக்கிறது, நன்றாக சாப்பிடுகிறோம்.

இருப்பினும் உடல் எடை குறைந்தால், அதனை ஒரு பெரிய விடயமாக பொருட்படுத்தாமல் முன்பை விட எடை குறைந்து காணப்படுகிறீர்களே என்று யாராவது சொன்னால், சந்தோஷத்துடன் இருப்பார்கள்.

மேலும் உடல் எடை அதிகமானால் தானே இதய நோய், கொலஸ்ட்ரால் போன்றவை வரும், ஆனால் உடல் எடை குறைந்தால் என்ன பிரச்சனை ஏற்படப் போகிறது என்ற எண்ணம் இருக்கும்.

ஆனால் இவ்வாறு எந்த காரணமும் இல்லாமல் உடல் எடையானது குறைய ஆரம்பித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

ஏனெனில், பொதுவாக உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு, உடல் எடை குறைவு ஒரு பெரிய அறிகுறி என்பதை முதலில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, சிறுநீரக செயலிழப்பதற்கு ஆரம்பித்தால், உடல் எடை குறைய ஆரம்பிக்கும். ஆகவே உடல் எடையானது திடீரென்று குறைய ஆரம்பித்தால், தாமதப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகிவிட்டால், உடலில் உள்ள பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட முடியும்.

சரி, தற்போது என்னென்ன காரணங்களுக்காக உடல் எடையானது குறையும் என்று கொடுத்துள்ளோம். அதைத் தெரிந்து கொண்டு, அவற்றைத் தவிர்த்தாலே, அத்தகைய பிரச்சனையை சரிசெய்து விட முடியும்.

* உடல் எடை குறைவதற்கு முக்கிய காரணம் பட்டினி இருப்பது தான். அதிலும் பெண்கள் குண்டாக இருக்கிறோம் என்று சரியாக சாப்பிடாமல், டயட் என்ற பெயரில் பட்டினி இருக்கிறார்கள்.

ஆனால், இந்நிலையில் உடல் எடையானது குறைந்தால் உடலில் வேறு சில பிரச்சனை இருக்கிறது என்று தான் அர்த்தம். ஆகவே மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

* சிலருக்கு பசியின்மையினால் உடலுக்கு அன்றாடம் வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் உடல் எடையானது குறைய ஆரம்பிக்கும். உண்மையில் எடையைக் குறைக்க வேண்டுமெனில் சரியான உணவுகளை உட்கொண்டு எடையை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.

* மன அழுத்தம், சோகம், கவலை, மன உளைச்சல் போன்றவை அதிகம் இருந்தாலும் உடல் எடையானது குறையலாம். எனவே தியானம், யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை அவ்வப்போது மேற்கொண்டு, மனதை அமைதியாகவும், சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால், இதனால் உடலில் வேறு சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

* சரியான தூக்கத்தை மேற்கொள்ளாவிட்டாலும், உடல் எடையானது குறையும்.

* தொண்டையில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும் உணவை விழுங்குவதற்கு சிரமம் ஏற்பட்டு உணவை சாப்பிட முடியாமல் உடல் எடையானது குறையும். எனவே தொண்டையில் பிரச்சனைகள் இருந்தால், அதனை விரைவில் குணப்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.

* செரிமான மண்டலத்தில் பிரச்சனை இருந்தாலும், உடல் எடை குறைய ஆரம்பிக்கும். சிலருக்கு உணவானது சரியாக செரிமானமாகாமல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்பட்டு, உடல் எடை குறைந்து காணப்படுவது அப்போதே நன்கு தெரியும்.

* அல்சர், வயிற்றில் புண் அல்லது பூச்சிகள் போன்றவை இருந்தாலும் உடல் எடை குறையும்.

* உடலில் புற்றுநோய் கட்டிகள் அல்லது வயிற்றில் ஏதேனும் கட்டிகள் இருந்தாலும், நிச்சயம் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.

* கல்லீரல் அல்லது கணையத்தில் அழற்சிகள் இருந்தால் அது உடல் எடையைக் குறைக்கும். தைராய்டு பிரச்சனையும் உடல் எடையை குறைப்பதில் முக்கியமான ஒன்றாக உள்ளது.

* இதயத்தில் ஏதாவது கோளாறு இருந்தால், அந்த கோளாறானது திடீர் உடல் எடை குறைவின் மூலம் தென்படும்.

* உடலில் சர்க்கரை நோய்/நீரிழிவு வந்திருப்பதை, உடல் திடீரென்று மெலிவடைவதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

* காசநோய் பிரச்சனை இருந்தால் உடலானது மெலிய ஆரம்பிக்கும். இரத்தத்தில் ஏதேனும் பிரச்சனைகளோ அல்லது நாள்பட்ட மலேரியா போன்றவை கூட உடல் எடையைக் குறைக்கும்.

* அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் மற்றும் சிகரெட் பிடித்தால், உடல் எடையானது குறைய ஆரம்பிக்கும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv