புற்றுநோயை கண்டறியும் சர்க்கரை

ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதை சர்க்கரையின் மூலம் எளிதாக கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். லண்டன் கிங்ஸ் கல்லூரி மற்றும் லண்டன் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இதனை கண்டறிந்துள்ளனர்.


 புற்றுநோய்க்கான எம்ஆர்ஐ ஸ்கேன் சோதனையின் போது, சர்க்கரையை பயன்படுத்தி நோயை கண்டறியும் புதிய மற்றும் இலகுவான உத்தியை உருவாக்கியுள்ளனர் இதன் காரணம் மனிதனின் மற்ற செல்களை விட புற்றுநோய் செல்கள் தங்களது வளர்ச்சிக்கு அதிகமான சர்க்கரையை ஈர்த்துக் கொள்கின்றன என்பதுதான்.

 எம்ஆர்ஐ ஸ்கேன் பயன்படுத்துவதற்கு முன்பே மனிதனின் உடலுக்குள் குளுக்கோஸ் செலுத்தப்படும், இவற்றை புற்றுநோய் செல்கள் அதிகமாக ஈர்த்துக் கொள்ளவதால் எம்ஆர்ஐ ஸ்கேன்களில் எளிதாக அடையாளம் காணலாம்.

 புற்றுநோயின் செல்களை எளிதாக காண்பதற்கு உதவும் இந்த புது நுட்பத்தை “குளுக்கோஸ் இரசாயன பரிமாற்றம் பூரித பரிமாற்றம்(glucocest)” என்று பெயரிட்டுள்ளனர். எனவே இனிவரும் காலங்களில், சிறப்பு மருத்துவ மையங்களை காட்டிலும், உள்ளூர் மருத்துவ மையங்களிலும் ஆற்றல் மிக்க ஸ்கேன் செய்யப்பட முடியும் என தெரியவந்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv