தமிழ் மொழியினை அடுத்த கட்டப் பரிமாண வளர்ச்சிக்குக் கொண்டு செல்லவேண்டும்.தமிழ்ச் சங்கங்களை அமைத்து தமிழ்மொழியை வளர்போம்.

தமிழ் சங்கங்களை பாடசாலைகளிடையே ஏற்படுத்தி அதனூடாக மாணவர்களியே தமிழ் மொழி ஆளுமை விருத்தியை மேம்படுத்துவதோடு அதனூடாக எமது கலை
கலாசாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும். அத்துடன் பாடசாலை மட்டத்திலிருந்தே மாணவர்களிடையே தமிழ்மொழிப் புலமையை வளர்த்துக் கொள்ள முடியும் என யாழ். பல்கலைக்கழத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் கீ.விசாகரூபன் தெரிவித்தார்.


யாழ்ப்பாணத் தமிழ்சங்கமும் யாழ். மறைமாவட்டமும் இணைந்து நடத்திய தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா தொடர்பாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மொழியினை அடுத்த கட்டப் பரிமாண வளர்ச்சிக்குக் கொண்டு செல்லவேண்டும். இதற்காகவே இன, மத உறவைக் கடந்து யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ். மறைமாவட்டமும் இணைந்து செயற்படுகின்றது. தமிழ்ச்சங்க வளர்ச்சிக்கு சிலர் காணிகளை அன்பளிப்புச் செய்யவுள்ளனர்.
நாமும் யாழ்ப்பாணத் தமிழ் சங்கத்துக்கென ஒரு நிரந்தரமான இடத்தினை அமைத்துச் செயற்படவுள்ளோம்.

தற்பொழுது யாழ்ப்பாணத்தில் தமிழ்மொழியை பிரத்தியேக பாடமாக மாணவர்கள் தெரிவுசெய்து விரும்பிக் கற்கின்றார்கள். கடந்த வருடம் யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையைத் தெரிவுசெய்த மாணவர்களின் எண்ணிக்கை 20 ஆகும். ஆனால் இந்த வருடம் தமிழ்த்துறையினை தெரிவுசெய்த மாணவர்களின் எண்ணிக்கை 70 ஆகும்.

கடந்த வருடங்களில் நாட்டில் தொழிலைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே மாணவர்கள் தொழில்துறை சார்ந்த கற்கை நெறிகளைத் தெரிவுசெய்து கல்விகற்று வந்தனர். இப்பொழுது தொழில்துறை சார்ந்த கற்கை நெறியினருக்கும் வேலை கிடைக்காமையுடன் தமிழ் மொழிப் பாடத்தினைக் கற்றவர்களுக்கு இலகுவில் பணிநியமனம் கிடைப்பதனால் தமிழ் மொழிப் பாடத்தினை தமது பிரத்தியேக கற்கை நெறிப்பாடமாகத் தெரிவுசெய்கின்றனர்.

பாடசாலை மாணவர்களிடையே தமிழ் மொழி விழிப்புணர்வை ஏற்படுத்தி கவிதை, கட்டுரை, பேச்சு என்பனவற்றை ஆளுமையுடைய மாணவர்களாக எதிர்காலத்தில் உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சி செய்யவுள்ளோம். எமது வாழ்வியல் மரபின் சம்பந்தமான விடயங்கள் மருவி வருகின்ற இந்நிலையில் இப்படியான எமது முயற்சிகள் எதிர்கால சந்ததியினரைச் செம்மைப்படுத்தும் என்பதை நாம் நம்புகின்றோம் என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv