காலை உணவை தவிர்க்காதீர்கள்

தினமும் காலை உணவை தவிர்த்தால் மாரடைப்பு ஏற்படும் என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக 27 பேரிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது, இதில் முதன்முறையாக 1500 பேருக்கு இதயக் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரவு உணவை தாமதமாக சாப்பிடுபவர்களுக்கும், காலையில் உணவை சாப்பிட்டு பின் இரவில் உணவை மிகவும் தாமதமாக சாப்பிடுகிறவர்களும் நோய் பாதிப்பிலிருந்து தப்ப முடியாது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து துறை நிபுணர் எரிக் ரிம் கூறுகையில், உணவுக் கட்டுப்பாடு இன்மை, புகைப்பிடித்தல், சரியான உடற்பயிற்சி இல்லாமை, மதுப்பழக்கம் இவற்றினால் மட்டும் இதயக் கோளாறு ஏற்படாது.

காலை நேர உணவைத் தவிர்ப்பதாலும், இரவில் உணவை மிகவும் தாமதமாக சாப்பிடுவதாலும் இதயக் கோளாறு வருவதற்கு அதிகம் வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

மேலும் காலை உணவை தவிர்ப்பதால் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு சேர்தல் மற்றும் நீரிழிவு நோய் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றும், பின் உடலில் மெல்ல மெல்ல இதயக் கோளாறு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv