உலகின் அதிவேக பயணம்: புதிய தொழில்நுட்பம் அறிமுகம்(வீடியோ இணைப்பு)

உலகின் பிரபல கோடீஸ்வரர்களுள் ஒருவரான Elon Musk என்பவர் மின்னல் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய புதிய தொழில்நுட்பத்தினைக் கொண்ட போக்குவரத்து சாதனம் ஒன்றை உருவாக்கி வருகின்றார்.


Concorde தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியதாகவும், குழாய்வழியினூடாக பயணிக்கக்கூடியதாகவும் காணப்படும் இப்புதிய சாதனமானது முற்றிலும் சூரிய சக்தியிலேயே செயற்படவுள்ளது.

மேலும் இவை புல்லட் ரெயின்களை விட 3 மடங்கு வேகம் கூடியதாகவும், விமானங்களை விட 2 மடங்கு வேகம் கூடியதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை Elon Musk என்பவர்தான் பிரபல ஒன்லைன் பணக் கொடுக்கல் வாங்கல் சேவையான PayPal இனை அறிமுகப்படுத்தியதோடு Tesla Motors எனும் நிறுவனத்தினையும் நடத்திவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

காணொளி பார்க்க 

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv