காக்கை வலிப்பு மனிதர்களின் அகால மரணத்திற்கு வழிவகுக்கின்றது

காக்கை வலிப்பானது மனிதர்களின் அகால மரணத்திற்கு வழிவகுக்கின்றது என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான மருத்துவர் ஸீனா பாஸல் என்பவர் மேற்கொண்ட ஆராய்ச்சியிலே இந்த தகவல் வெளியாகியுள்ளது.


 இவர் சுவீடனில் மேற்கொண்ட ஆய்வின்படி, 1954ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 69,995 பேர் காக்கை வலிப்பு நோய் உடையவர்களாக காணப்பட்டுள்ளனர்.

 இதில் 16 சதவீதமானவர்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கும் போதே விபத்துக்கள் மற்றும் தற்கொலை மூலம் மரணமடைந்துள்ளனர்.

 இதுபற்றி கருத்து தெரிவித்த ஸீனா, உலகம் முழுவதும் 70 மில்லியன் வரையான காக்கை வலிப்பு நோயுடையவர்கள் இருக்கின்றனர் என்றும், அவர்களை சீரான பரீட்சிப்பு மற்றும் முறையான பராமரிப்பு என்பவற்றின் மூலம் உயிரிழப்புக்களை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv