பாபிலோனிய தொங்குதோட்டம்


யுக்கிரத்யிசின் நதியின் கிழக்கு கரையோரமாக பாக்தாத்துக்கு தெற்கே 50 கிலோ மீட்டர் துரத்தில் பாபிலோனிய தொங்குதொட்டம் அமைந்துள்ளது.கி.மு 1792 - 1950 வரை புகழ் பெற்ற கமுருபி மன்னரின் ஆட்சியின் கீழ் பாபிலோனியர் ராச்சியம் இருந்தது.கி.மு 625 - 606 எழுச்சி கண்டிருந்த பாபிலோனிய பரம்பரையில் பிறந்த மன்னரான நேபுச்சட்னேசார்(Nebuchadnezzar II) கி.மு 604 - 562 வரை இப் பரம்பரையில் ஆட்சி செலுத்தி வந்தான்.இந்த மன்னன் தான் தனது மனைவியை அல்லது பட்டத்து அரசியினை மகிழ்விப்பதற்காக வரலாற்று பெருமை மிக்க தொங்கு தோட்டத்தை நிர்மாணித்தான்.
கிரேக்க வரலாற்றாசிரியர்களான பெரோசாஸ் மற்றும் சிக்கலஸ் ஆகியோரிடமிருந்து இந்த தொங்குதொட்டம் பற்றிய விரிவான தகவல்கள் கிடைக்கின்ற போதும் பாபிலோனிய சான்றுகள் இதை பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை.அம் மன்னனின் மாளிகை பாபிலோனிய நகரம் மற்றும் பாரிய சுவர் பற்றிய விரிவான விபரங்களை அம் மன்னரது ஆட்சிக்கால வரலாற்று ஆவணங்கள் கொண்டிருக்கின்ற போதும் தொங்குதொட்டம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

தொங்குதோட்டத்தை பற்றி விரிவான விளக்கத்தை கொடுத்துள்ள வரலாற்றாளர்கள் கூட அவற்றை பார்த்ததாக கூறவில்லை.தற்கால வரலாற்றாளர்கள், மகா அலெக்சாண்டரின் படைவீரர்கள் மொசப்பத்தேநியாவை அடைந்து பாபிலோனைக் கண்டு அதன்பால் ஈர்க்கப்பட்டார்கள் என்றே வாதிடுகின்றனர்.பின்னர் அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிய போது மொசப்பத்தேனியாவில் உள்ள கவர்ச்சிகரமான தோட்டங்கள் பாம் மரங்கள் பற்றிய கதைகளை சொல்லக்கூடியவர்களாக இருந்தனர்.நேபுச்சட்னேசறது அரண்மனை பற்றியும் பாபன் கோபுரம் பற்றியும் இவர்கள் சொல்வதற்கான கதைகளை எடுத்துச் சென்றனர்.அத்தோடு கவிஞர்களின் கற்பனைத்திறன் மற்றும் புராதன வரலாற்றைவாளர்கள் இந்த விடயங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி வடித்தெடுத்து உருவாக்கியதுதான் இந்த உலக அதிசயங்களில் ஒன்றான பாபிலோனிய தொங்குதொட்டம் ஆகும்.

தொங்குதோட்டத்தை சுற்றி உள்ள மர்மங்கள் இந்த இருபதாம் நூற்றாண்டு வரை இன்னும் கண்டுபிடிக்கபடாமலேயே தொடர்ந்து கொண்டு இருக்கிறது.தொல்பொருள் ஆய்வாளர்கள் இன்றுவரை இந்த தொங்குதோட்டத்தின் இருப்பிடம் பற்றி இறுதியான முடிவுக்கு வருவதற்கு முன்னர் போதுமான சான்றுகளை திரட்டுவதற்கு போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர்.இந்த தொங்குதொட்டத்தின் நீர்பாசன முறைமை மற்றும் அவற்றின் உண்மையான தோற்றம் பற்றிய சந்தேகங்களுக்கு இன்றுவரை தீர்வு எதுவும் காணப்படவில்லை.அண்மைக்கால ஆராய்ச்சியாளர்கள் சிலர் இந்த தொங்குதொட்டம் நேபுச்சட்னேசறினால் கட்டப்படவில்லை.இது செனாகிழ்ப் என்பவரால் கட்டப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

பாபிலோனின் சுவரின் சுற்றுவட்டம் 385 ஸ்டெடியா (ஒரு ஸ்டெடியா = 600 அடிகள் ).சுவர்களின் தடிப்பம் 32 அடிகள் ஆகும் .

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv