ஈழக் கவிகள் சில படைத்த தென்னிந்திய பிரபல கவிஞர் வாலி மரணம்!

பிரபல கவிஞர் வாலி சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82.
நுரையீரல் தொற்று மற்றும் அதிகமான சளியின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.


35 நாட்களாக அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் 2 நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

1958-ம் ஆண்டு படங்களுக்கு பாடல்கள் எழுதத் துவங்கிய கவிஞர் வாலி இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார். பத்மஸ்ரீ மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழில் எதுகை மோனையில் பாடல்கள் எழுதுவதில் இவரைவிட சிறந்த கவிஞர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில ஈழக் கவிதைகளை உணர்வுபூர்வமாக வடித்துள்ள கவிஞர் வாலி அவர்களுக்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவிக்கின்றோம்.

கவிஞர் வாலி அவர்கள் ஈழத் தமிழர்கள் பற்றி கவி வடித்து, தன் சொந்தக் குரலிலேயே வாசித்து அரங்கிலுள்ளோரை மெய்சிலிர்க்க வைத்திருக்கின்றார்.

முள்ளிவாய்க்கால் தமிழன் விடிவெள்ளி வாய்க்காமல் தவிக்கின்றானே..... என ஆரம்பிக்கும்

இக்கவியை பார்க்க, கேட்க.......

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv