மட்டு.செங்கலடி மாணவன் தேசிய மட்ட புத்தாக்குனர் போட்டிக்குத் தெரிவு

மட்டக்களப்பு செங்கலடி கணபதிப்பிள்ளை கிராமத்தில் அமைந்துள்ள செங்கலடி விவேகானந்தா வித்தியாலய மாணவன் தேசிய மட்ட புத்தாக்குனர் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.


 அண்மையில் திருகோணமலையில் நடைபெற்ற மாகாண மட்ட புத்தாக்குனர் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாமிடம் பிடித்த செங்கலடி விவேகானந்தா வித்தியாலய மாணவனான செல்வன்.ந.சந்தோஸினால் செய்யப்பட்ட செயற்கை மணி தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.

 சுமார் 300 ஆக்கங்களுடன் போட்டியிட்டு இரண்டாமிடம் பிடித்த மேற்படி மாணவனின் செயற்கை மணி எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய புத்தாக்குனர் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

 மேற்படி மாணவனின் ஆக்கத்திற்கு வழிகாட்டியாக இருந்த பாடசாலை அதிபர் கி.சிவலிங்கராஜா, வகுப்பாசிரியர் திருமதி.ம.சிவாகரன் மற்றும் பெற்றோர்களும் பாராட்டப்பட்டனர்.
0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv