நெப்ட்யூன் கிரகத்திற்கு 14வது நிலா கண்டுபிடிப்பு

நெப்ட்யூன் கிரகத்தின் இன்னொரு புதிய நிலாவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரியக் குடும்பத்தின் நீலம் மற்றும் பச்சை நிறத்திலான கிரகம் நெப்ட்யூன்.


இந்த கிரகத்திற்கு ஏற்கனவே 13 நிலாக்கள் உள்ளன. இந்நிலையில் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் இன்னொரு புதிய நிலாவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 S/2004 N 1 என்று பெயரிட்டுள்ள, இந்த நிலாவின் சுற்றளவு 19 கிலோமீற்றர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

 இந்த நிலவானது சிறிதாக மட்டுமல்லாமல் மங்கலாகவும், பிரகாசம் இன்றியும் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv