லொனார் விண்கல் பள்ளம்

லொனாரின் விண்கல் பள்ளம் தான் உலகிலேயே தீக்கல் பாறை வகைகளில் அமைந்த ஒரே உப்பு நீர் ஏரி ஆகும். அதோடு இந்த விண்கல் பள்ளம் 52,000 அண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்டது என்பது இதன் கூடுதல் சிறப்பு.
இந்த மாபெரும் விண்கல் பள்ளத்தை சூழ்ந்து காணப்படும் பசுமையான காடுகளும், 'க்ரீச்.. க்ரீச்' ஒலியுடன் அங்குமிங்கும் பறந்து செல்லும் எண்ணற்ற பறவை இனங்களும் ரம்மியமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இங்கு மயில், வாத்து, ஆந்தை, சிவப்பு மூக்கு ஆள்காட்டி போன்ற பறவைகளை பயணிகள் கண்டு ரசிக்கலாம். அதுமட்டுமல்லாமல் லொனார் ஏரியே கவின் கொஞ்சும் காட்சிக்கு சொந்தமானது.

லொனார் ஏரியின் பேரழகை அந்தி வெளிச்சத்தில், சூர்ய அஸ்த்தமனத்துக்கு சற்று முன்பு காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். லொனார் சரோவர் என்றும் அழைக்கப்படும் இந்த ஏரி, பல்வேறு மருத்துவ குணமுள்ள மூலிகைகள் மற்றும் நறுமணச் செடிகளுக்கும் உறைவிடமாக இருந்து வருகிறது.

மேலும் இங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் கம்ல்ஜா மேடம் எனும் பெயரில் கோயில் ஒன்றும் உள்ளது.

நமது பிரபஞ்சத்தில் புதைந்து கிடக்கும் மர்மங்கள் குறித்து அறிய விரும்புபவர்களும், புவியியல் மற்றும் அறிவியல் மீது நாட்டம் கொண்ட பயணிகளும் வாழ்கையில் ஒருமுறையாவது கண்டிப்பாக லொனார் ஏரிக்கு வர வேண்டும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv