100 ஆண்டுகளுக்கு பின்பு சூரிய வெளிச்சத்தை பெறும் நகரம்

கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாகவே குளிர்காலத்தில் சூரிய ஒளியே படாமல் இருந்த நோர்வேயின் ருஜூகான் நகரம், தற்போது கண்ணாடிகளின் உதவியால் சூரிய வெளிச்சத்தை பெறுகிறது.


கடந்த 1907ம் ஆண்டு நோர்ஸ்க் ஹைட்ரோ என்ற தொழில் நிறுவனத்தின் இணை இயக்குனரான சாம் அய்டு என்பவரால் ருஜூகான் நகரம் உருவானது. இந்நகரம் நோர்வேயின் டெலிமார்க் பகுதியில், குறுகலான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. எனவே இங்கு சூரிய வெளிச்சம் இயற்கையாக விழுவதற்கு வாய்ப்பே இல்லை.

 குளிர்காலத்தில் இங்குள்ள மக்கள் கேபிள் கார் மூலம் அருகில் உள்ள மலை உச்சிக்கு சென்று சூரிய வெளிச்சத்தை அனுபவித்துத் திரும்புவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இதற்கு மாற்று தீர்வை கண்டறிந்துள்ளனர். அதாவது அருகில் உள்ள மலையில் 450 மீற்றர் உயரத்தில் மூன்று பெரிய கண்ணாடிகளைப் பொருத்தியுள்ளனர்.

 அக்கண்ணாடிகளில் படும் சூரிய வெளிச்சம் எதிரொலிப்பதன் மூலம், நகரின் மத்தியப் பகுதியில் சூரிய வெளிச்சம் படுகிறது. இத்திட்டம் கடந்த 1ம் திகதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv