பிரபாகரனை சூரியக்கடவுளாகவே தமிழ் மக்கள் போற்றினார்கள்: அநுரகுமார திஸாநாயக்க

தமிழ் மக்கள் பிரபாகரனை சூரியக்கடவுளாகவே அடையாளப்படுத்தி புகழ்ந்து போற்றினார்கள் என ஜனநாயக தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


யுத்தம் முடிந்த பின்னர் வடபகுதி மக்களுக்கு உரிமைகளை வழங்கவில்லை. வடக்கின் மக்களது மனதில் இராணுவம் தொடர்பான எதிர்ப்புத் தன்மை நிலையே உருவாகும் எனவும் ஆக்கிரமிப்பாளர் என்ற நிலையே உருவாகும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று யுத்தம் முடிந்தும் வடக்கில் சிவில் நிர்வாகம் இல்லை. பிள்ளைகள் தினமும் காண்பது இராணுவத்தினரை என்றும் சிவில் நிர்வாகத்திலிருந்து இராணுவத்தினரை விலக்கி வேண்டும் எனவும் குறிப்பிட்டார். ஆளுநர் தொடக்கம் கீழ் மட்டம் வரை அனைத்தும் இராணுவ மயமாக இருப்பதாவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனது பிள்ளை யுத்தத்தால் இறந்த இடத்திற்கு சென்று கண்ணீர் அஞ்சலி செய்வதற்கு தாய்க்கு இடமளிக்காமல் தடுக்கப்படுகிறது எனவும் தமிழ் மக்களின் உணர்வுகள் மதிக்கப்படுவதில்லை எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

--> 13 ஆவது திருத்தம் மாகாண சபைகள் தொடர்பாக நாட்டில் விவாதம் உருவாகியுள்ளது. எமது படையினரின் அர்ப்பணிப்பில் யுத்தம் வெற்றி பெறப்பட்டுள்ளது. இந்த யுத்தம் பிரபாகரனாலோ அல்லது வேறெந்த சக்திகளாலும் இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டிக்காட்டினார்.

தமிழ், சிங்கள இனவாதிகள், ஆட்சியாளர்களின் தவறுகள் 1978இன் பின்னர் இந்தியா - புலி பயங்கரவாதத்தை போஷித்தது. ஆயுதம் வழங்கி முகாம்கள் வழங்கி பயிற்சிகளை வழங்கி இந்தியா போஷித்தது. தமிழ் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. அவர்களது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு கறுப்பு கொடி போட்டு எதிர்ப்பை வெளியிட முடியாது போனது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறீலங்கா அரசு  வடபகுதி தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தை ஜனநாயகத்தை வழங்கப் போவதில்லையென்ற செய்தியையே பிரபாகரன் தமிழ் மக்களுக்கு வழங்கினார் என்று தெரிவித்த அநுரகுமார திஸாநாயக்க யுத்தத்தின் பின்னரும் அம்மக்களை அடக்குவதால் அம் மக்கள் அந்த மன நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரனை சூரியக்கடவுளாக வணங்கினார்கள். தோல்வியடையாத தலைவராக மக்கள் பின்பற்றினார்கள். என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv