தந்தையின் தியாகத்தை நன்றியுடன் கௌரவிக்கும் நாள்-தந்தையர் தினம்


ஒவ்வொரு ஆண்டும் பெற்றோர்களை கௌரவிக்கும் வகையில் அன்னையர் தினம், தந்தையர் தினங்கள் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த அன்னா ஜெர்வீஸ் தன்னுடைய தாயை கவுரவிக்கும் வகையில் 1909–ம் ஆண்டு முதலாவதாக அன்னையர் தினத்தை கொண்டாடி உலகுக்கும் அறிமுகப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து தன்னுடைய வாழ்கையில் ஏற்படும் அனைத்து வெற்றிகளுக்கும் காரணமான தந்தையை கவுரவிக்கும் வகையில் 1910–ம் ஆண்டு அமெரிக்கா வாஷிங்டன் நகரில் 1910–ம் ஆண்டு ஜூன் 19–ந் தேதி சனேரா ஸ்மார்ட் டாட் என்பவர் தன்னுடைய தந்தையை கவுரவிக்கும் வகையில் தந்தையர் தினத்தை கொண்டாடினார்.

இவருடைய தந்தை வில்லியம் ஜேக்ஸ்சன் ஸ்மார்ட். இவர் உள்நாட்டு போர் வீரனாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி தவறிவிட்டதால் தன்னுடைய ஆறு குழந்தைகளையும் தனிமனிதனாக நின்று தன்னுடைய ஆசைகளை விட்டு குழந்தைகளை வளர்ப்பதில் கண்ணும், கருத்துமாக இருந்தார். இந்த தியாக செம்மலுக்காக அவருடைய மகள் சனேரா ஸ்மார்ட் டாட் தந்தையர் தினத்தை அறிமுகப்படுத்தினார்.

விடுமுறை தினத்தில் தந்தையர் தினம் கொண்டாடுவதற்காக தன்னுடைய தந்தை பிறந்த தினமான ஜூன் 5–ந் தேதி கொண்டாட முடிவு செய்திருந்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் உலக தந்தையர் தினம் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை என்று ஆகிவிட்டது.

தந்தையை கவுரவிப்பதற்காக மட்டுமல்லாது தந்தை மீது அன்பு செலுத்தவும், தந்தையை பேணிபாதுகாக்கவும் ஆண்டுதோறும் ஜூன் மூன்றாவது வாரம் ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்த தினம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிலி, பிரான்சு, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் ஜூன் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது.

1966–ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த லிண்டன் பி.ஜான்சன் என்பவர் தந்தையர் தினத்தை முறையாக அறிவித்தார். ஆறு ஆண்டுகளுக்கு பிறகு 1972–ம் ஆண்டு அமெரிக்கா நாட்டு அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்சன் இதை அதிகாரபூர்வ தினமாக அறிவித்து, தேசிய விடுமுறையும் அறிவித்தார்.

இந்த ஆண்டு  16–ந் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினத்தில் தியாக செம்மல்களான அவரவர்களின் தந்தைக்கு வாழ்த்து அட்டைகள், ரோஜாப்பூக்கள் மற்றும் நினைவுப்பரிசுகளை வழங்கி தங்கள் தந்தை மீதுள்ள அன்பை வெளிப்படுத்தலாம்.

இதற்காக  கடைவீதியில் தங்கள் தந்தைக்கு வழங்குவதற்காக பரிசு பொருட்கள் வாங்குவதற்கு பலர் ஆர்வம் காட்டினார்கள்.

ஆடைகள், வாழ்த்து அட்டைகள், மலர்கொத்துகள், நடைபயிற்சிக்கு பயன்படும் கம்புகள், இனிப்பு வகைகளை பலர் வாங்கிச் சென்றனர்.

தற்போது தந்தையர் தினமும் குழந்தைகளால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிற

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv