கத்தரிக்காயின் பயன்கள்

வெப்ப மண்டல பகுதிகளில் பயிரிடப்படும் கத்தரிக்காய் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.


 இக் கத்தரிக்காய் எமக்கு எந்த வகையில் பயனுள்ளதாக அமைகின்றது என்பதனை நாம் பார்ப்போம்..!

 * 100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது.

 * அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் திரவப் பொருள் உள்ளது. ஆந்தோசயான் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்ப்புப் பொருளாகும்.

 * "பி" காம்ப்ளக்ஸ் வகையான வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட், பைரிடமாக்சின், தயமின் மற்றும் நியாசின் ஆகிய உயிர்ச்சத்துகளும் கத்தரிக்காயில் அடங்கியுள்ளன. மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.

 * கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கு மிகவும் உகந்தவை. 

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv