தென்னை மரம் புகட்டும் பாடம்

தென்னம்பிள்ளை வளரும் போது மேல் நோக்கி நேராக வளர்கிறது. அதற்கு ஒரே ஒரு திசையில் வளர வேண்டும் என்ற நோக்கம் இருப்பதால் அவை மற்ற மரங்களை விட உயர்ந்து நிற்கின்றன.


நீங்கள் என்னைப் போல தனித்து, உயர்ந்து நிற்க வேண்டுமென்றால் ஒரே திசையில் வளர வேண்டும் என்ற நோக்கம் உடையவர்களாக இருங்கள் என்று தென்னை மனித குலத்திற்குக் கூறுகிறது.

தென்னை மரத்தின் நைந்து போன கீற்றுகள் எளிதில் விழுந்து விடுகின்றன. ஆகையால், தென்னை மரத்தில் தென்னங்கீற்று விழுந்து போன சுவடில்லாமல் வழவழப்பாக இருக்கும்.
--> கடந்த காலத்தில் நடந்தவற்றை விட்டுவிடுங்கள். அவற்றையே சிந்தித்துக் கொண்டிருந்தால் நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் பாதிக்கும் என்று தென்னை மரம் கூறுகிறது.

ஏனெனில் எல்லோருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கிறது. அப்பொழுது நாம் தெரிந்தும், தெரியாமலும் செய்த பல தவறுகள் நம் மனத்தை உறுத்திக் கொண்டே இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இவை மனிதர்களுக்கு ஏற்படும் சாதாரணமான குணமாகும். இந்த மன அழுத்தம் ஒருவனை தற்காலத்திலும், எதிர்காலத்திலும் வாழவிடாமல் செய்கின்றது.

ஆகவே கடந்து போனவைகளை மறந்து, நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கி விரைந்து செல்ல வேண்டுமென்று தென்னை மரம் மனிதர்களுக்குப் பாடம் புகட்டுகிறது.

தென்னை மரத்தின் அனைத்துப் பாகங்களும் மனித குலத்திற்குப் பயன்படுகின்றன. ஆறறிவு படைத்த மனிதன் தென்னை மரத்தைப் போலவும்,, அதற்கு மேலாகவும் மனித குலத்திற்குப் பயனுடையவர்களாக வாழ வேண்டும்.

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv