ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு - 63 உடல்கள் மீட்பு (வீடியோ இணைப்பு)

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லறை ஒன்று பெரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் பதப்படுத்தப்பட்ட 63 உடல்கள் இருந்துள்ளன. தலைநகர் லிமாவின் வடபகுதியில் சுமார் ஒரு மாத கால ஆராய்ச்சிக்குப் பின்னர் இவை கண்டறியப்பட்டுள்ளன.


 அவற்றில் பெரும்பாலானவை பெண்களின் உடல்களாகும் என கல்லறையை தோண்டியெடுத்த பெரு மற்றும் போலந்து நாடுகளின் தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். பல பெண்களின் உடல்கள் அமர்ந்த நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

 இவை கி.பி . 600 மற்றும் 1,000 ஆவது ஆண்டுகளுக்கு இடைப்பட்ட வாரி நாகரீக பெண்களுடைய உடல்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். --> அவற்றில் 4 உடல்கள் அரசிகளுடையது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

 கல்லறைகளில் இருந்து தங்கம், வெள்ளி ஆபரணங்கள், ஆடைகள் மற்றும் மரச் சிற்பங்கள் போன்ற பொருட்களும் இருந்ததாக தொல்லியல் துறையினர் கூறியுள்ளனர்.

 இதன் மூலம், பதப்படுத்தப்பட்ட பெண்கள் செல்வச் செழிப்புடையவர்களாக இருந்திருக்க வேண்டும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

காணொளியை பார்க்க 

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv