தானாகவே நகரும் சிலை

4000 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து சிலை தானாகவே நகர்வது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் மான்செஸ்டர் அருங்காட்சியகத்தில், எகிப்தில் மம்மி புதைக்கப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்ட 10 அங்குலம் உள்ள சிலை உள்ளது.


 இந்த சிலை தானாகவே நகர்ந்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. --> அதாவது, பொதுமக்கள் பார்வையில் படும்படி நேராக வைக்கப்பட்டிருந்த இந்த சிலை, 180 டிகிரி சுழன்று பின்பகுதி மட்டும் பார்வையாளர்களுக்கு தெரியும்படி மாறி நின்றது.

 இதனை பார்த்த அருங்காட்சிய கண்காணிப்பாளர்கள், சிலையை நேராக வைத்தனர். ஆனால் அடுத்த சில நாள்களிலேயே சிலை மீண்டும் பின்புறமாக திரும்பிக் கொண்டது. எனவே அந்த சிலை இருந்த பகுதியில் டைம் லேப்ஸ் வீடியோ கமெரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

 இரவு நேரத்தில் அசையாமல் இருக்கும் சிலை, பகல் நேரத்தில் தானாகவே மெதுவாக நகர்ந்து திரும்பிக் கொள்வது தெரியவந்தது. இது ஆவியின் வேலையாக இருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 ஏனெனில், மம்மி முறையில் பதப்படுத்தி பாதுகாக்கப்படும் சடலம் அழிக்கப்பட்டால் அந்த ஆவி அதனுடன் புதைக்கப்படும் சிலையில் புகுந்துவிடும் என்று எகிப்தில் அக்காலத்தில் நம்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv