லண்டனில் இராணுவ வீரர் கழுத்தறுத்து படுகொலை! (Video)

லண்டன் புறநகர்ப் பகுதியான வூல் விச்சில், தெரு ஒன்றில் ரத்தம் படிந்த கத்தியுடன் ஒருவர் கமரா முன் தோன்றும் காட்சி இன்று ஐ.ரிவி இல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட நபர் ஒரு ஆபிரிக்க முஸ்லீம் ஆவார். அவர் தெருவில் வந்த முன் நாள் இராணுவ வீரர் ஒருவரை கத்தியால் குத்தி கொலைசெய்துவிட்டு, கமரா முன் தோன்றி தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார். 


வேலை ஒன்றைப் பெறுவதற்காக (இன்ரர்வியூ) க்கு சென்றுகொண்டு இருந்த நபர் ஒருவரே தனது கமராவில் இதனைப் பதிவுசெய்துள்ளார். வெளிநாடுகளில் வெள்ளைக்காரர்கள் செய்யும் அட்டூழியங்களை பார்த்துவிட்டு தான் , நான் இக் கொலையைச் செய்தேன் என்று கொலையாளி கூறியுள்ளார். அதாவது அவர் குறிப்பிடுவது அமெரிக்கா மற்றும் பிரித்தானிய படைகளையே !

சற்று நேரத்தில் அங்கே வந்த பொலிசார், கொலையாளையையும் மற்றும் பிறிதொரு நபரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். இதனால் கொலையாளி கொல்லப்பட்டாரா என்று தெரியவில்லை. முதலுதவிப் பிரிவினர் அங்கே அவர்களுக்கு சிகிச்சை கொடுக்கும் காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது. பொலிசார் குற்றவாளி மீது ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் அவர்கள் தம்மை தாக்க முற்பட்டதாக ஒரு பொலிசார் தெரி தெரிவித்துள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம். 

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv