என் மனம் அறிவாயா

கொண்ட காதல் மனதில் இருக்க
     இருவரும் வேதனையுடன்
கழிகிறது நாட்கள் அல்ல வருடங்கள்

 காதல் காத்திருப்பிற்கு
    இலக்கணமானது தான்
நான் அறிவேன் -இருப்பினும்
   என் வேதனை நீ அறிவாயா


 உன் உயிர் அல்லவா நான்
     உன் உறவல்லவா நான்
என் மனம் அறியாதவனா நீ -இல்லையே
    எனக்காய் வாழ்பவன்
 உன் உறவை
     எப்போது சொந்தமாக்க போகிறாய்

கனவுகள் ஒன்றல்ல பல
    உன்னுடன் வாழும்
அந்த நாளுக்காய்
    உயிரை மட்டுமே தாங்கி நிற்கின்றேன்
என் மனம் அறிவாயா
                           

                                                             விசாலு

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv