தாய்லாந்தில், மன்னர் முடிசூட்டுவிழாவின் போது, திருவெம்பாவையும் தேவாரமும் பாடப்படுகிறது

இன்றும் மன்னராட்சி நிகழும் தாய்லாந்தில், மன்னர் முடிசூட்டுவிழாவின் போது, திருவெம்பாவையும் தேவாரமும் பாடப்படுகிறது!


பொ.பி கக ஆம் (கி.பி 11ஆம்) நூற்றாண்டில், சோழப்பேரரசு காலத்தில், “சீயம்” என்ற பெயரிலிருந்த தாய்லாந்து, சோழர் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டது. அதன் எச்சமே இந்த பாவையும் தேவாரமும் பாடும் வழக்கம்! மன்னரின் அரச குரு வாமதேவ முனிவர், தமிழ்நாட்டிலிருந்து சென்று குடியேறிய பிராமணர் பரம்பரையில் வந்தவர்.

முன்பு ஓரளவு கிரந்த வரிவடிவத்தை அறிந்திருந்த இவர்கள், இன்று தமிழையோ கிரந்தத்தையோ எழுத - படிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். எனினும், திருவெம்பாவைப் பாடல்களை தமது “தாய்” மொழியின் வரிவடிவத்தில் எழுதிவைத்து பாடுகிறார்கள். முடிசூட்டுவிழாவில் மாத்திரமன்றி, இன்றும் வருடாந்தம் டிசம்பரில் (நம் மார்கழி மாதம்) நிகழும் அரச ஊஞ்சல் விழாவிலும் தேவாரம் - பாவைப்பாடல்கள் அவர்களால் பாடப்படுவதுண்டு.


~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv