குறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்

இலவசமாக/குறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கக் கூடிய இந்த வகைப் பழங்களையும் தேடிக்கண்டுபிடித்துப் பயன்படுத்தலாம். இவை ஆப்பிள், திராட்சை, வாழைப் பழங்களைப் போன்றோ/அதைவிட அதிகமாகவோ ஊட்டச் சத்துக்கள் (வைட்டமின்) உள்ளவை.


ஆலம் பழம், அரசம் பழம், இச்சலம் பழம், அத்திப் பழம், கிளாப் பழம், பூலாப் பழம், ஆனாப் பழம், ஈச்சம் பழம் (பேரீட்சை அல்ல), சப்பாத்திக் கள்ளிப் பழம் முதலியன.

 இவற்றுள் சில, ஊருக்கு வெளிப்புறங்களில் வானம் பார்த்த பூமியில், காடு, கரைகளில்.வயல் வெளிகளில், ஏரி், குளக் கரைகளில் கிடைக்கும். சாதரண இலந்தைப் பழத்தைவிட சற்றுப் பெரியதாகவோ/சிறியதாகவோ இருக்கும். பல்வேறு சுவைகளில் கிடைக்கும். ஒதுக்கிவிடாமல் உள்ளூர்ப் பெரியவர்களின் உதவியுடன் தெரிந்துகொண்டு சாப்பிடலாம்.

ஏனெனில் சில சாப்பிடக் கூடாத வேறு பழங்களாகவும் இரு்க்கலாம். காடுகளில் பாலைப்பழம், கூளாம் பழம், முரளிப் பழம், வீரைப் பழம், கரம்பைப் பழம், பனிச்சம் பழம், சூரைப் பழம், உலுவிந்தம் பழம், நறுவிலிப்பழம், கரையாக்கண்ணிப் பழம், துடரிப்பழம், அணிஞ்சில் பழம், ஈச்சம் பழம், என பல பழங்கள் இருந்திருக்கின்றன.

பெயர்களும் பலருக்குத் தெரிந்திருக்காது. இவற்றை எல்லாம் கதைகளில்தான் படித்திருப்போம். இப்பொழுது சில மிகவும் அரிதாகவே கிடைக்கும் என்றாகிவிட்டது. நகர மயமாதலின் விளைவாக காடுகள் அழிந்து போய்விட்டன.காடுகள், மலைகளிலிருந்து இயற்கை நமக்கு அளித்து வந்த பழ வகைகளும்; பெரிதும் அழிந்துவிட்டன.

தற்போது இலங்கையில் பல பாகங்களிலும் ஈச்சம்பழம்,பாலப்பழம்,முந்திரியம் பழங்கள் போன்றன சீவனோபாய வியாபாரிகளால் தெரு ஓரங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
                                                   
                                                         பாலைப்பழம்


                                                                    நாவல் பழம்                                                                    ஈச்சம் பழம்  


                                                                  முந்திரியம் பழம் 

கடுகுடாப்பழம் 


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv