விண்வெளிக்கு முதற்கட்டமாக அனுப்பப்பட்ட எலிகள் உயிருடன் திரும்பின

விண்வெளிக்கு முதற்கட்டமாக அனுப்பப்பட்ட எலிகள், பல்லிகள் மற்றும் நத்தைகள் ஆகியவை உயிருடன் திரும்பியதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


 எதிர்வரும் 2030ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டுள்ள ரஷ்யா, அதன் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய முதல்கட்டமாக விண்வெளிக்கு உயிரினங்களை அனுப்பி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் முயற்சியாக 45 எலிகள், 15 பல்லிகள், நத்தைகள் மற்றும் தாவரங்களை கடந்த ஏப்ரல் மாதம் பியான்-எம்.என்ற விண்கலத்தில் வைத்து ரஷ்யா விண்ணுக்கு அனுப்பியது.

 அந்த விண்கலம் பூமியில் இருந்து சுமார் 575 கி.மீட்டர் தூரத்தில் ஒரு மாத காலமாக விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. தற்போது ஆய்வு முடிந்த நிலையில் அந்த விண்கலம் ஓரன்பர்க் மாகாணத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது. இதன்போது, விண்வெளிக்கு அனுப்பப்பட்ட எலிகள், பல்லிகள் மற்றும் நத்தைகளில் பெரும்பாலானவை உயிருடன் இருந்தது தெரிய வந்துள்ளது.

 பொதுவாக விண்வெளிக்கு சென்றதும் உடல் எடை குறையும், அந்நிலையில் உடல் உறுப்புகள் பணிபுரியும் தன்மை குறித்து ஆராய்வதற்காக இந்த சோதனை முயற்சி செய்யப்பட்டதாக ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv