உன்னினைவுகளே உறவாய்..

 உனக்காய் தவிக்கும் மனதுக்கு
மருந்தாய் உன் நினைவுகள்
 என்னுள் எப்போதும்....
 உள்ளம் சிலிர்க்கும் உறவாய்
உன் எண்ணங்கள் எந்நாளும்...
 கண்ணீரில் கரையும் இரவுகளில்
 போர்வையாய் உன்
 எண்ணங்களின் தரிசனம் ...


 ஏனென்று கேளாமல்
 உன்னிடம் இழந்த இதயம்
உரத்து அழுகிறது
 அதுவும் மௌனமாய்...

 இதயம் கேட்பது உன்னையல்லவா..
 இது உண்மையல்லவா..
 இதை நீ உணர்வாயா..
 எனக்கு இனி உன்னினைவுகளே
 நானிருக்கும் நாள்வரைக்கும்...?

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv