தமிழ்க்குயில் கா.கலியபெருமாள்

தமிழ்க்குயில் கா.கலியபெருமாள் (ஆகத்து 19, 1937 - சூலை 8, 2011) மலேசியாவில் பேராக் மாநிலத்தில் பிறந்தவர். இவர் மலேசியாவின் மூத்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 80க்கும் மேற்பட்ட மலேசியத் தமிழ்ப்பள்ளிக்கூடப் பயிற்சி நூல்களை எழுதியவர்.


 நூற்றிற்கும் மேலான தமிழ் இலக்கண இலக்கிய நூல்களை எழுதியவர். மலேசியாவில் தமிழர் சடங்கு முறைகளை முறையாக வடிவமைத்துக் கொடுத்தவர். பாவேந்தர் பாரதிதாசன் ‘தமிழ்க்குயிலார்’ எனும் சிறப்பு விருதை 1960 ஆம் ஆண்டுகளில் வழங்கினார்.

அந்த விருதை கலியபெருமாள் அவர்கள் தம்முடைய இறுதிகாலம் வரையில் தம் பெயருடன் இணைத்து வாழ்ந்தார். உலகத் தமிழர் பண்பாட்டுக் களஞ்சியத்தை உருவாக்கியவர். கல்வி, எழுத்துச் சேவைகளினால் தேசிய நல்லாசிரியர் விருது, பேராக் மாநில சுல்தான் விருது, ஆசிரியர் சங்கத் தொண்டர்மணி விருதுகளைப் பெற்றவர்.

அமெரிக்க உலகப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் (முனைவர்) பட்டம் வழங்கிச் சிறப்பு செய்து உள்ளது. இவரின் தமிழ்ப் பற்று அளவிலடங்கா. இவரின் பிள்ளைகளின் பெயர்கள் முழுக்க முழுக்க தமிழிலே சூட்டப்பட்டன.
 கலைச்செல்வி, -
கலைமதி, -
கலைவாணி, -
கலைமுத்து,
 கலையரசு, -
கலைமுகிலன்.
 ஆகியோர் தமிழ்க்குயில் கா.கலியபெருமாள் அவர்களின் மக்கள் ஆவர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv