இன்று புவி நாள் (Earth Day)

புவி நாள் (Earth Day) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.


 தற்பொழுது புவி நாள் ஏறக்குறைய 175 உலக நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வரப்படுகிறது. இந்நாளில், நாம் சுற்றுச் சூழலை மாசு செய்யாமல் நல்ல முறையில் பாதுகாப்போம் என உறுதிக் கொள்ளவோம்.

 கண்ட இடங்களில் குப்பைகள் போடுவதையும், மாசுப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வீட்டுக்கொரு மரம் நடுவதையெல்லாம் கடைப்பிடித்தல் வேண்டும்.

 நாளை நம் தலைமுறையினர் இன்பமாக வாழ இன்று நாம் வழி வகுப்போம். சுற்றுச்சூழலை நேசிப்போம், நீரைச் சேமிப்போம், தூய்மையைப் பேணுவோம்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv