உலகப் புத்தக தினத்திற்காக நல்ல புத்தகங்களில் இருந்து தொகுக்கப்பட்ட வாசகங்கள்…

01.ஆச்சரியப்படுவதுதான் தத்துவம் தோன்றுவதற்கான முதற் காரணம் என்கிறார் அரிஸ்டாட்டல். அதுபோலவே அனைத்துத் தத்துவங்களும் ஆச்சரியப்படுவதில்தான் முடிவடைகின்றன. முதல் ஆச்சரியம் அறியாமையில் தோன்றும் கடைசி ஆச்சரியம் பாராட்டில் முடிவடையும்.


 02. ஹிக்ஸ் போஷான் என்பது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மந்திரச் சொல் என்கிறார்கள். சமீபத்தில் நடாத்தப்பட்ட அணுக்கரு உடைப்புப் பரிசோதனையானது இந்த பிரபஞ்சத்தையே உருவாக்கிய கடவுள் துகளைக் கண்டு பிடித்தது. அந்தக் கடவுள் துகள்தான் ஹிக்ஸ் போஷான். ஆகவே ஹிக்ஸ் போஷான் ஆதி சிவாய நம என்று சொன்னால் அந்த மந்திரம் நேரடியாக கடவுளைத் தட்டும் என்கிறார்கள். அதைத் தொடர்ந்து சொல்லி எதிர்பாராத அதிர்ஷ்டங்களை பலர் பெற்றுள்ளார்கள்.

03. சந்திரமண்டலத்தில் மனிதன் கால் வைக்கக் காரணமாக இருந்த வெர்னர் வான் பிரான் சொல்லுகிறார் : விண்வெளியில் மனிதன் பறப்பது ஒரு சாதனைதான் ஆனால் இதன் மூலம் அகண்டத்தின் ஒரு சிறு கதவை மட்டுமே திறந்திருக்கிறோம். ஆனால் அந்த முதற்கதவே நமக்குச் சொல்லும் செய்தி : இந்த அற்புதங்களை படைத்த யாரோ இருக்க வேண்டும் என்பதுதான் என்றார்… அந்த யாரோ வேறு யாருமல்ல ஹிக்ஸ் போஷான் என்ற அணுத்துகள்தான் என்கிறது இன்றைய விஞ்ஞானம்.

04. நாம் அறிந்துள்ளவை மிகமிக சொற்பம், அதனால்தான் சேர். ஐசாக் நியூட்டன் கடல் மண்ணில் ஒரு சிட்டிகை மண்ணைத்தான் நான் கண்டு பிடித்திருக்கிறேன் என்றார். இதை அவருக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நமது அவ்வையார் கற்றது கைமண்ணளவு என்று சொல்லிவிட்டார்.

 05. நம்முடைய உலகமும், பிரபஞ்சமும் படைக்கப்பட்டுள்ள ஒழுங்கைப் பார்த்தால் இதைத் திட்டமிட்டு உருவாக்கியவர் ஒருவர் இருக்கத்தான் வேண்டும். இதில் சந்தேகம் இல்லை, அப்படி நம்புவதைத் தவிர இன்றைய அறிவியலுக்கு வேறு வழியும் இல்லை என்கிறார் வெர்னர் வான் பிரான்.

06. விஞ்ஞான ஆய்வுகள் அனைத்திற்கும் கடவுளே காரணம். அவர் முத்திரை நம்மீது படிந்திருப்பதால்தான் விஞ்ஞான அறிவை நம்மால் செயற்படுத்த முடிகிறது என்று ஆங்கில அறிஞர் கேரி வெப்ஸ்டர் குறிப்பிடுகிறார்.

07. நாம் செய்கிற காரியம் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அது உலகத்தை ஏதோ ஒருவிதத்தில் பாதிக்கிறது. உலகத்தின் ஷேமம் நாம் செய்கின்ற காரியங்களிலேயே தங்கியிருக்கிறது.

 08. கடலில் ஒரு கல்லைப் போட்டாலும் அதில் ஒரு மாற்றம் ஏற்படவே செய்கிறது. எந்தச் சிறிய விஷயமும் முக்கியமானதே. ஆகவேதான் நமது செயல் மற்றவர்களை எப்படிப் பாதிக்கிறது என்பதை அறிந்து செயற்பட வேண்டும். எதைச் செய்தாலும் அதனால் வரும் விளைவுகளை யோசித்தே செய்தல் வேண்டும்.

09. நஷ்டங்களைப் பாராதே.. இலாபங்களைப் பார் ! துயரங்களைப் பாராதே மகிழ்ச்சிகளைப் பார்..! விரோதிகளை எண்ணாதே நண்பர்களை எண்ணு..! பயங்களை எண்ணாதே துணிச்சலை எண்ணு..! மோசமான செயல்களை எண்ணாது நல்ல செயல்களை எண்ணு..! செல்வத்தை எண்ணுவதற்குப் பதில் ஆரோக்கியத்தை எண்ணு..! உன்னைப்பற்றியே எண்ணிக் கொண்டிருக்காமல் கடவுளைப்பற்றி எண்ணு!

10. அழிந்து போகும் செல்வத்தையே பலர் இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். பணத்தால் வாங்க முடியாத விஷயங்களும் இந்த உலகில் இருக்கின்றன என்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள். வெறியோடு பணத்தைச் சேர்த்து வரியைக்கட்டி, அந்தக் கவலையால் நோய்க்கும் ஆளாகிவிடுகிறார்கள்.

11. உலகத்தைக் கொள்ளையடித்து தன் பையில் நிரப்பப் புறப்பட்ட ஒவ்வொருவனும் இறுதியில் தானே கொள்ளையடிக்கப்பட்டுவிட்டதை உணர்வான் என்கிறார் தாமஸ் மெஸ்டன்.

12. மன அமைதி, தெளிவான மனச்சாட்சி, நட்பு, பாசம், கடமையை நேசித்தல் ஆகியவற்றின் மூலமாகத்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. வேகம், பணம், புதிய கார்கள், கேளிக்கைகள் ஆகியவற்றில் இருந்து மகிழ்ச்சி கிடைப்பதில்லை.

13. வாழ்க்கையில் பணத்திற்கும் ஓர் இடம் வேண்டும், ஆனால் அது உங்கள் வேலையாளாக இருக்கட்டும், அது உங்கள் எஜமானனானால் கஷ்டம் தானாகவே வந்துவிடும்.

 14. உங்களுடைய வாழ்க்கை உங்களுக்காக மட்டும் கொடுக்கப்படவில்லை, மற்றவருக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது வாழ்க்கைக்கு மட்டுமல்ல உங்களிடமுள்ள செல்வத்திற்கும் பொருந்தும்.

15. இந்த உலகத்தில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தவர்களில் ஒருவர் விஞ்ஞானி ஐன்ஸ்டைன், அவர் சொல்கிறார் : நாம் அனைவரும் குறைந்த காலப் பயணத்திட்டத்தில்தான் இந்தப் பூமிக்கு வந்திருக்கிறோம். ஏன் வந்திருக்கிறோம் என்று நமக்குத் தெரியாது. ஆனால் அன்றாட வாழ்க்கையை வைத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெரிகிறது. ஏதோ ஒரு தெய்வீக நோக்கத்திற்காகத்தான் வந்திருக்கிறோம் என்பதே அது. மனிதன் தனக்காக அல்ல மற்றவர்களுக்காகவே இந்தப் பூமியில் வாழ்கிறான். ஆம்..! எண்ணற்ற ஜீவன்களின் விதி ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. அப்படி இணைந்திருப்பதால்தான் நாம் செய்யும் தீய செயல்கள் நமது குடும்பத்திற்கு அவப்பெயரைத் தருகின்றன, நற்செயல்கள் நற்பெயரைத் தருகின்றன.


 16. நமக்கு முன் வாழ்ந்தவர்களின் உழைப்பின் மீதுதான் நம்முடைய வாழ்க்கை கட்டப்பட்டிருக்கிறது. இதை ஒரு நாளைக்கு நூறு தடவைகள் எண்ணிப் பார்க்க வேண்டும். என்றோ உலகில் தோன்றிய அந்த மனிதர்களிடமிருந்து பெற்றதை திருப்பிக் கொடுக்க வேண்டுமானால் நாம் எவ்வளவோ கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் : ஐன்ஸ்டைன்

 17. பத்துக் குஷ்டரோகிகள் ஆலயம் சென்றார்கள் அவர்களில் ஒருவர் மட்டும் சுகப்பட்டார், மற்றவர்கள் சுகப்படவில்லை.. ஏன்..? என்று இயேசுநாதரரிடம் கேட்டார்கள், அதற்கு அவர் சொன்னார்: பத்துப்பேரில் ஒருவரிடம் மட்டுமே கடவுள் நம்பிக்கை இருந்துள்ளது என்று.. ஆம் நம்பிக்கை இல்லாதவர்களை கடவுள்கூட காப்பதில்லை.

18. பத்துக்கு ஒன்பதுபேர் சிந்திப்பதில்லை வாழ்க்கை அடித்துச் சென்ற திசையில் போகிறார்கள். பலருக்கு வாழ்க்கையில் என்ன தேவை என்பதே தெரியாது. எதுவித குறிக்கோளும் இல்லாமல் போடி போக்கில் வாழ்வோரால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது.

19. கடையைத் திறப்பதல்ல கெட்டித்தனம், அதற்கு முன் வியாபாரம் நடக்கக் கூடிய பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த இடத்தில் கடையை ஆரம்பித்தால் இலாபகரமாக அமையுமா என்று ஆராய வேண்டும். அதுபோலத்தான் வாழ்க்கைக்கு நீங்கள் அமைத்துக் கொண்டுள்ள சூழ்நிலைகள் வாழ்க்கைக்கு வெற்றி தருமா என்றும் ஆராய வேண்டும்.

 20. ஜனத்தொகை கூடக்கூட கோஷங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஜனங்களும் அதிகரித்தே செல்கிறார்கள். இதனால் நிபுணர்களின் எண்ணிக்கை கூடினாலும் கூட, பிரச்சனைகள் மேலும் சிக்கலாகியே செல்கின்றன. சீர்தூக்கிச் சிந்திக்கும் திறமை மக்களிடையே குன்றி வருவதே இன்றைய அவலங்களுக்கு முக்கியமான காரணம்.

21. சிந்திக்கின்ற மனோபாவம் ஏற்பட்டுவிட்டால் கூடவே நிஜத்தின் தன்மையினை ஆராய்ந்தறியும் திறமையும் தோன்றிவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக நிஜம் ஒன்று இருக்கிறது என்பதும், அதுதான் கடவுள் என்பதும் தெரியவரும்.

22. நீங்கள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியிலும் சிந்தனை வழிகாட்டட்டும், எதையும் மேம்போக்காகப் பார்க்கின்ற மனோபாவத்தை நீங்கள் கைவிட வேண்டும். வெற்றிகரமான வாழ்க்கைக்கு இது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

 23. சிந்தனையின் மூலமாகவே புதிய தீர்வுகளையும், அணுகுமுறைகளையும் கண்டு பிடிக்க முடிந்ததாக வெற்றி பெற்ற வாழ்க்கை வாழ்ந்தோர் கூறுகிறார்கள். இதற்கு மகாத்மாவும், வினோபாவும் நல்ல உதாரணம்.

 24. ஒவ்வொரு நாளும் காலையிலோ அல்லது மாலையிலோ பத்து நிமிடங்களை ஒதுக்கி, உங்களை நீங்களே ஆராயுங்கள். உங்களுடைய ஒவ்வொரு செயலையும் சீர்தூக்கிப் பாருங்கள். மன ஓய்வுக்கும், அர்த்தமுள்ள வாழ்க்கைக்கும் இது மிக அவசியம்.

 25. நாம் குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காகத்தான் புவியில் பிறந்திருக்கிறோம். அதைக்கண்டு பிடிக்க நேரத்தை ஒதுக்குங்கள், நேரம் இல்லை என்று கூறாதீர்கள். எதைச் செய்வதற்கும் உங்களால் நேரத்தைக் கண்டு பிடிக்க முடியும். காரணம் சிந்தனைதான் நேரத்தின் உபயோகத்தை நிர்ணயிக்கிறது. காதலியையும், மதுவையும் தேடுவதற்கு நேரத்தை தாராளமாகக் கண்டு பிடிக்கும் உன்னால் நீ ஏன்பிறந்தாய் என்பதைக் கண்டுபிடிக்க நேரம் ஒதுக்க முடியாதென்று கூறுவது பொய்யானது.

3 கருத்துரைகள்:

chenlina said...

chenlina20160401
jordan retro 4
coach factorty outlet
louis vuitton purses
longchamp le pliage
hollister outlet
michael kors outlet clearance
nike roshe run
lebron 13
oakley sunglasses
christian louboutin
marc jacobs handbags
coach factorty outlet online
replica rolex watches
lebron 11
tod's shoes
coach outlet
michael kors outlet
coach factorty outlet
true religion outlet
asics shoes
air jordan shoes
toms shoes
ray ban sunglasses
louis vuitton outlet
coach outlet
michael kors outlet clearance
longchamp handbags
toms wedges
coach outlet
ray bans
true religion jeans
coach outlet
coach outlet
cheap jerseys
louis vuitton outlet
coach outlet
ray ban sunglasses outlet
insanity workout
cheap oakley sunglasses
louis vuitton handbags
as

林东 said...

michael kors outlet
michael kors handbags
true religion outlet
ray ban sunglasses discount
ralph lauren outlet
cheap nike air max
rolex watches
adidas superstar
skechers shoes
sac longchamp pliage
supra shoes
yeezy boost 350
coach outlet store online
true religion outlet
kate spade
toms shoes
louis vuitton factory outlet
canada goose jackets
cheap jerseys wholesale
tiffany jewelry
nike free flyknit
polo ralph lauren
kate spade outlet
cartier love bracelet
cheap jordan shoes
hollister sale
michael kors outlet online
lebron james shoes
longchamp bags
adidas trainers
fitflops sale clearance
timberland boots
coach outlet
instyler max
north face jackets
ralph lauren outlet
0730xiong

Gege Dai said...

michael kors outlet
versace sunglasses on sale
hollister shirts
canada goose jackets
ralph lauren outlet
michael kors handbags wholesale
reebok shoes
ralph lauren uk
fitflops outlet
michael kors outlet
beats headphones
fitflops uk
ugg boots on sale
coach outlet
michael kors handbags on sale
michael kors handbags clearance
ralph lauren pas cher
michael kors handbags
tiffany jewellery
air max 90
uggs outlet
michael kors outlet online
ray ban sunglasses
michael kors handbags
rolex uk
michael kors handbags
ugg boots
michael kors clearance
canada goose outlet store
tory burch outlet online
true religion jeans
true religion jeans
ugg boots
ugg boots clearance
adidas wings shoes
ray ban sunglasses
0809jianxiang

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv