லொயலாக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தது போலீஸ்


இன்று 11.03.2013 அதிகாலை   1.45 மணியளவில் உண்ணாவிரத பந்தல் அருகில் பொலீஸ் படை புகுந்து  போராட்டம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் மற்றும் உடனிருந்த அனைத்து மாணவர்கள் மற்றும் இயக்குனர்.கௌதமன், இயக்குனர்.களஞ்சியம்,  ம.தி.மு.க. மல்லை சத்யா , வேளச்சேரி மணிமாறன் திருமலை(சி.பி.ஐ), கென்னடி,  மே 17 இயக்கம் திருமுருகன், தோழர்.கயல்விழி ,தோழர்.இராஜா ஸ்டாலின்,செந்தில்,அருண்செளரி,திருமலை உள்ளிட்ட பலரும் கைதுசெய்யப்பட்டு அரும்பாக்கம் அருகில் உள்ள சமுதாய நாலக்கூடத்தில்   தங்கவைக்கப்பட்டுள்ளனர். என தமிழகத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முதல் இணைப்பு
உண்ணாவிரதம் நடக்கும் இடத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த போலீஸ் மாணவர்கள் மற்றும் இயக்குனர் ராம், கவுதமன், திருமுருகன் உட்பட அனைவரையும் கைது செய்து அண்ணாநகரிலிருக்கும் கல்யாணமண்டபத்திற்கு கொண்டு செல்வதாக தகவல்..  

பிரிட்டோ என்ற மாணவன் யார் என்று குறிவைத்து கேட்டபடியே போலீஸ் உள்ளே புகுந்திருக்கிறது. அந்த பையனை காணவில்லை.. இப்போது மாணவர்களை எந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.. என்ற விபரம் தெரியவில்லை.

ஏனைய அனைவரும் அருகிலிருக்கும் சமூகநலக்கூடத்தில் அடைத்திருப்பதாக தகவல்.

 Cartoonist Bala

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv