நடமாட இயலாத மாற்று திறனாளி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்களுடன் இணைந்து உண்ணாவிரதம்

ஜெகதீஷ்,உண்ணாவிரதப்பந்தலுக்குள் நுழைந்ததுமே கைத்தட்டல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. அவரை உண்ணாவிரதம் இருக்கும் மற்ற மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்று ஊக்குவிக்கிறார்கள்.


. யார் இந்த ஜெகதீஷ். அவருக்கு எதற்கு இத்தனை வரவேற்பு என்று ஆச்சரியப்படுபவர்களை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் இவர்.. நடமாட இயலாத அளவுக்கு மாற்றுத்திறனாளியான இந்த 21 வயது இளைஞர், தற்போது கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

 லொயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில் பங்கெடுக்க முடியாத நிலையில் கடந்த 3 நாட்களாக வீட்டிலேயே உண்ணாவிரதம் இருந்த ஜெகதீஷ், கோவை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை அறிந்து அவர்களுடன் இணைந்திருக்கிறார். 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், கோவை அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு கணினி பயிற்சி கொடுப்பது, தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது என்று தீவிரமாக இருக்கும் இவர், ஈ மேனேஜ்மெண்ட் என்ற மின்னணு நாளிதழில் இணையாசிரியராகவும் இருக்கிறார்.

இலங்கை தமிழர்களுக்காக பேஸ்புக், ட்விட்டரில் தொடர்ந்து பதிவுகளை செய்துவரும் ஜெகதீஷ், ஐநாவுக்கும் அடிக்கடி ஈமெயில் மூலம் வேண்டுகோள்களை விடுத்துவருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். உடல்நிலை காரணமாக 3 வேளையும் உணவை தவிர்க்க முடியாத சூழலில் உள்ளபோதும், அதனை மறுக்கும் ஜெகதீஷ்.. தொடர்ந்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார். via ஈழம்பெண்கள்

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv