சிரிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள் அதுவே ஆன்மாவின் சங்கீதம்.

ஒரு காரியத்தை சிறப்பான முறையில் ஆரம்பித்தால் அதில் பாதி முடிந்துவிட்டது என்பது அர்த்தமாகும்… 01.

1 வெற்றியை விரும்பும் ஒருவன் செலவில்லாத ஒன்றை தாராளமாகக் கொடுக்கலாம், உதாரணம் : நட்பையும் அன்பையும் தாராளமாக வழங்கலாம் : பெஞ்சமின் பிராங்கிளின்.

02. உனது நாக்கின் நீளம் கூடக்கூட ஆயுளின் நீளம் குறைந்து செல்லும். 03. உற்சாகமான ஒரு வார்த்தையை சொல்வது பணத்தைக் கொடுப்பதைப் போல உன்னதமானதுதான்.


 04. பேசுவதற்கு முன் கீழ்வரும் மூன்று கேள்விகளை கேட்டுவிட்டு பேசுங்கள்
: 01. அது உண்மைதானா..?
 02. அது அன்பானதுதானா..?
 03. அது தேவையானதுதானா..? என்று கேளுங்கள், மேலும் உரையாடலின்போது நீங்களே அதிக நேரத்தை ஆக்கிரமிப்ப செய்யாமல் இருங்கள்.

 05. மோசமானவரிடமும் நல்லது இருக்கலாம், நல்லவரிடமும் மோசமானது இருக்கலாம் ஆகவே மற்றவர் குறைகளை பேசாதிருப்பது நல்லது.

06. மற்றவர்களை புண்படுத்துகிற விதத்திலும், குத்திக்காட்டுகிறவிதத்திலும் பேசக்கூடாது. தனது மனைவி குத்தலாக பேசுவாள் என்பதற்காகவே ஆபிரகாம் இலிங்கன் இரவு நெடு நேரம் கழித்துத்தான் வீடு வருவாராம்.

 07. இரண்டு காதுகளால் கேட்டு, வாயினால் அதை அப்படியே வெளிப்படுத்துவோரை யாரும் நண்பராக வைத்திருக்க விரும்புவதில்லை.

 08. யாராவது உங்களை தங்கள் பேச்சுக்களால் நியாயமின்றி அவமானப்படுத்த நினைத்தால் நீங்கள் கூனிக்குறுகி நிற்க வேண்டிய அவசியமில்லை, நீங்களும் திரும்பப் பேசலாம்.

 09. ஆனால் எதிரியின் கருத்தைத் திருப்பித் தாக்கும் முன்னர் அவர் சொன்ன கருத்துப்பற்றி மேலும் விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் மறுப்பை அமைதியாகவும் அன்பாகவும் தெரிவிப்பது நல்லது.

 10. உங்களைப்பற்றியே நீங்கள் பேசிக்கொண்டிருந்தால் மற்றவர் வெறுப்பை விரைவில் சம்பாதித்துக் கொண்டுவிடலாம்.

11. மற்றவர்கள் பேசுவதை கவனமாகக் கேளுங்கள், நீங்கள் மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் எதையும் புதிதாக தெரிந்து கொள்ள முடியாது.

12. கடவுள் இரண்டு காதுகளையும் ஒரு வாயையும் படைத்திருப்பது குறைவாகப் பேசி அதிகமாக கேட்க வேண்டும் என்பதற்குத்தான்.

13. மற்றவர்களுக்கு அக்கறையுள்ள விடயங்களை பற்றிப் பேசுங்கள், அப்போதுதான் கேட்பவர்கள் அவர்கள் முக்கியத்துவத்தை நீங்கள் அங்கீகரிப்பதாக மகிழ்வார்கள்.

 14. வாழ்க்கை என்பது ஆச்சரியம் நிரம்பியது, அதில் மிகப்பெரிய ஆச்சரியம் உரையாடல் கலை..! அதில்தான் மறைந்திருக்கிறது மிகப்பெரிய சக்தி..

 15. சிரிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள் அதுவே ஆன்மாவின் சங்கீதம்.

16. நாம் செய்யும் வேலையில் கவனமெடுக்காமல் அடுத்து, என்ன நடக்குமோ என பயப்பட்டே அதிக நேரத்தை இழந்து போகிறோம்.

 17. தன்னுடைய இரத்த அழுத்தத்தைக் குறைக்க தனது நகைச்சுவையே காரணம் என்று காந்தி குறிப்பிடுகிறார்.

18. மனம் விட்டு சிரிக்கின்ற பழக்கம் டாக்டருக்கு நீங்கள் செலுத்துகின்ற பணத்தைக் குறைப்பதோடு உங்கள் வாழ்நாளையும் நீடிக்கிறது.

19. சிரிப்பு சீக்கிரம் தொற்றிக்கொள்ளும், நீங்கள் மகிழ்வாக இருந்தால் உங்களை சுற்றி இருப்போரும் மகிழ்வாக இருப்பார்கள்.

20. ஒரு மோசமான செய்தியோ அல்லது கவலையோ உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதித்தாலும் உங்கள் சிரிப்பு இழந்த ஆரோக்கியத்தை மீட்டுத் தரும்.

 21. டாக்டர் அளிக்கின்ற மாத்திரையைவிட அவர் காட்டுகின்ற சிரிப்பே நோயை மாற்றும் சக்தியை நமக்குத் தருகிறது.

22. ஒரு குழந்தை சிரித்தால் நீங்களும் சிரிக்கிறீர்கள் குழந்தையின் புன்முறுவல் உங்கள் முகத்திலும் தோன்றும், சிரிப்பின் வலிமை அதுதான்.

 23. கஷ்டங்களை மனிதன் சமாளிப்பதற்கு இயற்கை அவனுக்கு வழங்கியுள்ள வரப்பிரசாதம் புன்முறுவலாகும்.

 24. சிலர் தங்கள் கவலைகளினால் புன்முறுவல் பூக்காமல் இருக்கலாம் அப்படிப்பட்டவர்களை நீங்கள் உங்கள் புன்முறுவலினால் உற்சாகப்படுத்துங்கள்.

 25. கடவுள் மகிழ்ச்சியானவர்களை ஆசீர்வதிக்கிறார், ஏனென்றால் அவர்கள் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பவராக இருக்கிறார்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv