ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் என்ஜீனியர் வினோதினி மரணம்

காரைக்காலை சேர்ந்த பெண் என்ஜினீயர் வினோதினி (வயது 23).  இவர் ஒருதலைக்காதல் தோல்வியால் சுரேஷ் என்ற வாலி பர் ஆசிட் வீசியதில் முகம், கை, தோள் முழுவதும் பாதித் தது. 2 கண்களிலும் பார்வை இழந்த அவர் கடந்த 3 மாதமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். 

வினோதினி மீது ஆசிட் வீசிய சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பார்வை இழந்த வினோதினிக்கு சிகிச்சை அளிக்க பலர் உதவி செய்ய முன்வந்தனர். 


சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோதினிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 
இந்நிலையில் இன்று(12.2.2013)  காலை வினோதினி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv